Apply for 129 government jobs at NHDA Sri Lanka. Open for O/L, A/L & Degree holders. Check salary, qualifications, closing date & get A/L / Degree forms here.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை (NHDA) வேலைவாய்ப்பு 2024: 129 பதவி வெற்றிடங்கள் – விண்ணப்பபடிவம் கடைசியில் கொடுக்கப்பட்டு உள்ளது !
இலங்கை வீடமைப்பு, நிர்மானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் (National Housing Development Authority – NHDA) நிலவும் 129 பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு தகுதியான இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கான தகைமைகள், சம்பள விபரங்கள் மற்றும் A/L, Degree பதவிகளுக்கான உத்தியோகபூர்வ விண்ணப்பப் படிவங்கள் (Application Forms) கீழே தரப்பட்டுள்ளன.
விரைவுச் சுருக்கம் (Job Overview)
| நிறுவனம் | தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை (NHDA) |
| மொத்த வெற்றிடங்கள் | 129 இடங்கள் |
| முக்கிய பதவிகள் | காசாளர், கணக்கு உத்தியோகத்தர், ஆவணக் காப்பக பொறுப்பாளர், தொழில்நுட்ப உதவியாளர் |
| அடிப்படைக் கல்வித் தகைமை | O/L, A/L, NVQ Level 5 / Diploma, Degree |
| சம்பள அளவுத்திட்டம் | ரூ. 40,560/- முதல் ரூ. 202,140/- வரை |
| விண்ணப்பிக்கும் முறை | பதிவுத் தபால் மூலம் (Registered Post) |
| விண்ணப்பிக்க இறுதித் திகதி | 08.11.2026 |
பதவி விபரம் மற்றும் தகைமைகள் (Vacancies & Qualifications)
விண்ணப்பதாரர்களின் வசதிக்காக முன்னுரிமைப் பதவிகள் விரிவாகக் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
01. காசாளர் (Cashier – MA 1-2) – 30 வெற்றிடங்கள்
- சம்பள அளவுத்திட்டம்: ரூ. 46,220 – 10×540 – 7×630 – 12×1,080 – 12×1,280 – 84,350/-
- வயது எல்லை: 18 முதல் 45 வயதுக்குள்
- கல்வித் தகைமை:
- க.பொ.த (சா/த) பரீட்சையில் சிங்களம் அல்லது தமிழ், ஆங்கிலம், கணிதம் உட்பட 04 பாடங்களில் திறமைச் சித்தி (Credit Pass) உடன் 06 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
- க.பொ.த (உ/த) பரீட்சையில் 03 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும் (வணிகப் பிரிவில் கணிதப் பாடம் உள்ளடங்கலாகத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்).
- அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் கணனி பயன்பாடு தொடர்பான கற்கைநெறியை பூர்த்தி செய்திருத்தல்.
- அனுபவம்: அரச அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிதி/வர்த்தக நிறுவனத்தில் காசாளராக குறைந்தபட்சம் 01 வருட கால சேவை அனுபவம்.
02. கணக்கு உத்தியோகத்தர் (Accounts Officer – JM 1-1) – 22 வெற்றிடங்கள்
- சம்பள அளவுத்திட்டம்: ரூ. 72,650 – 10×1,360 – 18×2,040 – 122,970/-
- வயது எல்லை: 22 முதல் 45 வயதுக்குள்
- கல்வித் தகைமை & அனுபவம்:
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வர்த்தகம் / நிதி / கணக்கியல் / முகாமைத்துவம் ஆகிய துறைகளில் ஒன்றில் பட்டம் (Degree). அல்லது
- ICASL / CIMA / ACCA / AAT ஆகியவற்றில் இடைநிலை அல்லது பகுதி தகைமை பெற்றிருத்தல்.
- தொடர்புடைய துறையில் அரச அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தில் 01 வருட கால சேவை அனுபவம்.
03. ஆவணக் காப்பக பொறுப்பாளர் (Record Keeper – PL 1) – 20 வெற்றிடங்கள்
- சம்பள அளவுத்திட்டம்: ரூ. 40,560 – 10×450 – 10×490 – 7×540 – 15×590 – 62,530/-
- வயது எல்லை: 18 முதல் 45 வயதுக்குள்
- கல்வித் தகைமை: க.பொ.த சாதாரண தரப் (G.C.E. O/L) பரீட்சையில் இரண்டு பாடங்களில் திறமைச் சித்தி (Credit) உட்பட குறைந்தபட்சம் 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் போதுமானது.
04. தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant – MA 2-2) – 21 வெற்றிடங்கள்
- சம்பள அளவுத்திட்டம்: ரூ. 50,540 – 10×540 – 7×630 – 4×1,080 – 20×1,280 – 90,270/-
- வயது எல்லை: 18 முதல் 45 வயதுக்குள்
- கல்வித் தகைமை:
- NVQ மட்டம் 5 (NVQ Level 5) சான்றிதழ் (சிவில் / கட்டிட நிர்மாணம் / வரைபடம்). அல்லது
- NDT / HNDE / NDES அல்லது அதற்கு சமனான தொழில்நுட்ப டிப்ளோமா தகைமை பெற்றிருத்தல்.
05. ஏனைய பதவி வெற்றிடங்களின் முழு விபரம்
அதிகார சபையினால் கோரப்பட்டுள்ள ஏனைய உயர் நிர்வாக மற்றும் தொழில்நுட்பப் பதவிகள்:
| பதவிப் பெயர் | சம்பளத் தரம் | வெற்றிடம் | வயது & ஆரம்ப சம்பளம் |
|---|---|---|---|
| முகாமையாளர் (புதியமைப்பு) | MM 1-1 | 25 | 22 – 45 வயது | ரூ. 91,690/- |
| பிரதிப் பொது முகாமையாளர் (நிதி) | HM 1-3 | 01 | 35 – 55 வயது | ரூ. 132,500/- |
| பிரதிப் பொது முகாமையாளர் (திட்டமிடல், ஆய்வு & அபிவிருத்தி) | HM 1-3 | 01 | 35 – 55 வயது | ரூ. 132,500/- |
| உதவிப் பொது முகாமையாளர் (பொறியியல் சேவை & களஞ்சிய நிர்மாணம்) | HM 1-1 | 01 | 35 – 55 வயது | ரூ. 140,640/- |
| உதவிப் பொது முகாமையாளர் (தகவல் தொழில்நுட்பம்) | HM 1-1 | 01 | 35 – 55 வயது | ரூ. 140,640/- |
| முகாமையாளர் (மனித வள முகாமைத்துவம்) | MM 1-1 | 01 | 22 – 45 வயது | ரூ. 91,690/- |
| முகாமையாளர் (நிர்வாகம்) | MM 1-1 | 02 | 22 – 45 வயது | ரூ. 91,690/- |
| முகாமையாளர் (வழங்கல்) | MM 1-1 | 01 | 22 – 45 வயது | ரூ. 91,690/- |
| தொழில்நுட்ப உதவியாளர் (மின்சாரம்) | MA 2-2 | 02 | 18 – 45 வயது | ரூ. 50,540/- |
| மின் தொழில்நுட்பவியலாளர் (Electrician) | PL 3 | 02 | 18 – 45 வயது | ரூ. 43,280/- |
பொதுவான நிபந்தனைகள் மற்றும் சலுகைகள்
- விண்ணப்பதாரர் இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும் மற்றும் சிறந்த நன்னடத்தை கொண்டவராக இருத்தல் வேண்டும்.
- தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் காப்புறுதித் திட்டம், ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) மற்றும் ஏனைய நலன்புரி சலுகைகள் வழங்கப்படும்.
தெரிவு செய்யப்படும் முறை
விண்ணப்பங்களின் தகுதிகள் பரிசீலிக்கப்பட்டு, எழுத்துப் பரீட்சை மற்றும் / அல்லது நேர்முகப் பரீட்சை (Interview) மூலம் சிறந்த புள்ளிகளைப் பெறுவோர் தெரிவு செய்யப்படுவர்.
எவ்வாறு விண்ணப்பிப்பது? (Application Instructions)
- கீழே தரப்பட்டுள்ள இணைப்பிலிருந்து நீங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்குரிய மாதிரி விண்ணப்பப் படிவத்தை (Application Form) பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
- விண்ணப்பப் படிவத்தைத் தெளிவாகப் பூர்த்தி செய்து, அத்துடன் உங்கள் கல்விச் சான்றிதழ்கள், தொழில்சார் அனுபவச் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ் மற்றும் கிராம அலுவலர் சான்றிதழ் ஆகியவற்றின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளை (Certified Copies) இணைக்கவும்.
- விண்ணப்பம் வைக்கப்படும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “விண்ணப்பிக்கும் பதவியின் பெயர்” தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
- விண்ணப்பங்களை அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டு 14 நாட்களுக்குள் பதிவுத் தபாலில் (Registered Post) கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்:
தலைவர்,
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை,
சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை,
கொழும்பு 02.
தொலைபேசி: 011-2446180 / 011-2473913
முக்கிய பதிவிறக்கங்கள் & இணைப்புகள் (Download Section)
உங்களுக்குத் தேவையான உத்தியோகபூர்வ மாதிரி விண்ணப்பப் படிவங்களை கீழ்வரும் பட்டன்களைக் கிளிக் செய்து PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்: