University of jaffna  Bachelor of Fine Arts Honours in Music / Dance /Art & Design Degree programmes Aptitude Test Application 2023-UOJ

University of jaffna  Bachelor of Fine Arts Honours in Music / Dance /Art & Design Degree programmes Aptitude Test Application 2023-UOJ

APPLY NOW

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை

சேர்.பொன்.இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடம்

சங்கீதத்தில் சிறப்பு நுண்கலைமாணி
நடனத்தில் சிறப்பு நுண்கலைமாணி
சித்திரமும் வடிவமைப்பிலும் சிறப்பு நுண்கலைமாணி கற்கை நெறிகளுக்கு
மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சை
கல்வியாண்டு 2022/2023 | மொழிமூலம் : தமிழ்

மேற்படி நான்கு வருட பட்டப் படிப்புக் கற்கைநெறிகளுக்கு அனுமதி பெற விரும்பும் 2022/2023 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான குறைந்தபட்ச தகைமையை பெற்றுக் கொண்டுள்ள தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் 07.09.2023 தொடக்கம் 19.09.2023 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

அனுமதிக்கான தகைமைகள்

கர்நாடகசங்கீதம், நடனம், சித்திரமும் வடிவமைப்பும் கற்கைநெறிகளில் யாதேனுமொன்றைத் தெரிவு செய்வதற்கு விரும்பும் விண்ணப்பதாரிகள் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தியடைந்து இருப்பதுடன் தெரிவு செய்யவிரும்பும் பாடநெறிக்குரிய பாடத்தில் அதாவது கர்நாடகசங்கீதம் அல்லது நடனம் – பரதம் அல்லது சித்திரக்கலையில் ஆகக் குறைந்தது திறமைச்சித்தியும் (C), மற்றைய இரண்டு பாடங்களிலும் ஆகக் குறைந்தது சாதாரணதரச் சித்தியும் (S) பெற்றிருப்பதுடன் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையை பெற்றிருத்தல் வேண்டும்.

மொழிமூலம் :

  • தமிழ்

மதிப்பீடு செய்யும் முறை

  • கர்நாடகசங்கீதம் –  நடனம் (பரதம்) – ஆற்றுகைப் பரீட்சை
  • சித்திரமும் வடிவமைப்பும் – செய்முறை மற்றும் எழுத்துப்பரீட்சை

விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்

விண்ணப்பதாரிகள் www.jfn.ac.lk என்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இணையத் தளம் ஊடாக தத்தமது விண்ணப்பங்களை நிகழ்நிலையாக (Online)19.09.2023 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கப்பட வேண்டும். பாடசாலை அதிபர் அல்லது சமாதான நீதவானால் உறுதிப்படுத்தப்பட்ட க.பொ.த (உ/த) 2022 பெறுபேற்றுப் பத்திரத்தினது போட்டோப் பிரதியும் கட்டணம் செலுத்தப்பட்ட பற்றுச் சீட்டினையும் விண்ணப்பத்துடன் இணைத்துக்கொள்ளுதல் அவசியமானது.

விண்ணப்பித்த பிரதிகளை பதிவிறக்கம் செய்து அதில் கையெழுத்திட்டு க.பொ.த உயர்தர பெறுபேற்று பத்திரப் பிரதி மற்றும் கட்டணம் செலத்திய பற்றுச்சீட்டினையும் விண்ணப்பத்துடன் இணைத்து உதவிப்பதிவாளர், அனுமதிகள் கிளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இராமநாதன் வீதி, திருநெல்வேலி எனும் முகவரிக்கு கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் ‘சங்கீதம்/நடனம்/சித்திரமும் வடிவமைப்பும் 2022/2023’ எனக் குறிப்பிட்டு பதிவுத்தபால் மூலம் அல்லது 21.09.2023 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியவாறு சமர்ப்பித்தல் வேண்டும்.

தகுதியுடைய விண்ணப்பதாரிகளுக்கு பரீட்சைக்குரிய அனுமதி அட்டை அவர்களினால் வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படும்.

பரீட்சை தொடர்பான அனைத்துத் தகவல்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இணையத்தளத்தில் அறிவிக்கப்படும். 

விண்ணப்பங்களை விண்ணப்பிக்குக !

பணம் செலுத்தும் முறை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கணக்கிலக்கத்திற்குச் சேரக் கூடியதாக ஏதாவது ஒரு மக்கள் வங்கிக் கிளையில் கட்டணத்தைச் செலுத்தி இருத்தல் வேண்டும்.

இலகற்கைநெறி மக்கள் வங்கிக் கணக்கிலக்கம்விண்ணப்பக் கட்டணம்
1கர்நாடக சங்கீதம்0400024000016221,000.00
2நடனம்- பரதம்0400024000016301,000.00
3சித்திரமும் வடிவமைப்பும்0400024000016482,600.00

மேற்குறிப்பிட்டவாறு விண்ணப்பதாரிகள் தங்கள் பாடங்களிற்கு ஏற்றவாறு பொருத்தமான குறிப்பிலக்கத்தை வங்கிப் பற்றுச் சீட்டில் குறிப்பிடவும். இக் கட்டணத்தினை இணையவழி மூலம் மேற்குறிப்பிட்ட கணக்கிலக்கத்திற்கு வைப்புச் செய்ய முடியாது.

அனுமதிக்குரிய ஆகக்குறைந்த தகைமையை கொண்டிராதவையும், பணம் செலுத்திய பற்றுச்சீட்டு சமர்ப்பிக்கப்படாதவையும், க.பொ.த (உயர்தரம்) பெறுபேற்று பத்திரங்களின் உறுதி செய்யப்பட்ட போட்டோ பிரதிகள் இணைக்கப்படாதவையும், விண்ணப்ப முடிவுத்திகதிக்குள் கிடைக்கப்பெறாதவையுமான விண்ணப்பங்கள் யாவும் நிராகரிக்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கு தொலைபேசி எண் 021 222 6714 அல்லது மின்னஞ்சல் முகவரி: admissions@univ.jfn.ac.lk மூலம் தொடர்பு கொள்ள முடியும்.

பதிவாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

1 Trackback / Pingback

  1. University of Jaffna Aptitude Test Application 2023-UGC - Ceylon Vacancy

Comments are closed.