HOW TO REGISTER FOR FUEL PASS 2026?new updates

HOW TO REGISTER FOR FUEL PASS 2026?

🛢️ தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் (National Fuel Pass) —பிரச்சினை தொடர்பாக மக்களிடம் உள்ள கேள்விகளுக்கு அரசாங்கம் வெளியிட்டு உள்ள பதில்கள்

1. குத்தகை (Leasing) நிறுவனத்தின் கீழ் உள்ள வாகனத்தை எரிபொருள் QR இற்காக பதிவு செய்ய முடியவில்லையே?
வாகனம் ஒரு குத்தகை நிறுவனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர் பதிவின் போது வாகன இலக்கம் மற்றும் சேஸி (Chassis) இலக்கத்தைப் பயன்படுத்தி எரிபொருள் QR இற்குப் பதிவு செய்யலாம்.
2. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய முடியவில்லை அல்லது அது முடக்கப்பட்டுள்ளதாகக் காட்டுகிறது.
வாகன உரிமையாளர் மாற்றம் அல்லது மொபைல் இலக்க மாற்றங்கள் காரணமாக சுயவிவரங்கள் (Profiles) முடக்கப்படலாம். கணினியில் லொகின் (Log in) செய்து, QR குறியீட்டை மீண்டும் உருவாக்குங்கள் (Regenerate).
3. கணினியில் QR குறியீடு அல்லது வாகன விவரங்களைச் சரிபார்க்க முடியவில்லை.
இது இரண்டாம் நிலை ஆதரவுப் பிரிவிற்கு (Level 2 Support) பாரப்படுத்தப்பட வேண்டும். இதைப் புகாரளிக்கும் போது வாகன இலக்கம் மற்றும் சேஸி இலக்கத்தைத் துல்லியமாகப் பதிவு செய்யவும்.
4. ஒரு முச்சக்கர வண்டிக்கு 15 லீட்டர் ஒதுக்கீடு உள்ளது, ஆனால் QR குறியீடு 14 லீட்டர் என்று காட்டுகிறது.
இந்த முரண்பாடு அடுத்த ஒதுக்கீடு சுழற்சியில் (Quota Cycle) சரி செய்யப்படும். உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட ஒதுக்கீட்டிற்கு ஏற்பவே எரிபொருள் வழங்கல் புதுப்பிக்கப்படும்.
5. முந்தைய தொடர்பு இலக்கத்தைப் பயன்படுத்தி லொகின் செய்யும் போது, “தொடர்பு இலக்கம் இல்லை அல்லது செல்லாதது” என்று காட்டுகிறது.
  • தொடர்பு இலக்கம் மொபைல் சேவை வழங்குநரின் தரவுத்தளத்தில் செயலில் (Active) இருக்க வேண்டும்.
  • மொபைல் சேவை வழங்குநரிடம் இலக்கத்தின் நிலை மற்றும் உரிமை மாற்ற விவரங்களைச் சரிபார்க்கவும்.
  • இலக்கம் மாறியிருந்தால், பழைய விவரங்கள் நீக்கப்பட்டிருக்கலாம் — அத்தகைய சந்தர்ப்பத்தில் மீண்டும் பதிவு செய்யவும்.
6. பதிவு செய்யும் போது “இந்தச் சேவையில் தற்காலிகத் தடை ஏற்பட்டுள்ளது” என்று வருகிறது.
இது ஒரு தற்காலிக தொழில்நுட்பப் பிரச்சினையாகும். பிரவுசர் கேச்-ஐ (Browser cache) சுத்தப்படுத்தவும் அல்லது சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சிக்கவும்.
7. 48cc பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் எவ்வாறு QR குறியீட்டைப் பெறலாம்?
தற்போது, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் (DMT) பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் QR குறியீடுகள் வழங்கப்படுகின்றன. பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு தற்போது அனுமதி இல்லை.
8. புதிய தொடர்பு இலக்கத்துடன் லொகின் செய்யும் போது “தொடர்பு இலக்கம் இல்லை” என்று காட்டினால்?
தொடர்பு இலக்கம் செயலில் இருக்க வேண்டும். முந்தைய பதிவிற்குப் பிறகு இலக்கம் மாறியிருந்தால், பழைய சுயவிவரம் நீக்கப்பட்டிருக்கலாம் — எனவே வாகனத்தை மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.
9. அடையாள அட்டை (NIC) எண் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காட்டுகிறது, ஆனால் நான் பதிவு செய்யவில்லை.
இது இரண்டாம் நிலை ஆதரவுப் பிரிவிற்கு (Level 2 Support) பாரப்படுத்தப்பட வேண்டும். அடையாள விவரங்களைச் சரிபார்த்த பிறகு, பழைய விவரங்கள் நீக்கப்படும்.
10. வாகனம் விற்கப்பட்டுவிட்டது, ஆனால் பழைய உரிமையாளர் இன்னும் QR ஐப் பயன்படுத்துகிறார்.
உரிமையாளர் தரவு சுத்திகரிப்பு (Data cleansing) முடிந்ததும், புதிய உரிமையாளர் வாகனத்தை மீண்டும் பதிவு செய்து புதிய QR குறியீட்டைப் பெற முடியும்.
11. புத்தம் புதிய வாகனம் “ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று காட்டுகிறது.
வாகன ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு, பழைய பதிவுகளை நீக்க இரண்டாம் நிலை ஆதரவுப் பிரிவிடம் முறையிட வேண்டும்.
12. முதல் உரிமையாளர் பதிவு செய்துள்ளதால் என்னால் (2வது உரிமையாளர்) பதிவு செய்ய முடியவில்லையே?
தற்போது கணினியில் வாகன உரிமையாளர் விவரங்கள் சீரமைக்கப்படுகின்றன. இற்றைப்படுத்தல் முடிந்ததும் மீண்டும் பதிவு செய்ய முயற்சிக்கவும்.
13. புதிய QR குறியீட்டை எரிபொருள் நிலையத்தில் ஸ்கேன் செய்ய முடியவில்லை.
கணினியில் லொகின் செய்து QR குறியீட்டை மீண்டும் உருவாக்குங்கள் (Regenerate). பிரச்சினை தொடர்ந்தால், வாகன விவரங்களுடன் புகாரளிக்கவும்.
14. பழைய உரிமையாளர் எனது வாகன QR ஐப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றால் என்ன செய்வது?
கணினி இற்றைப்படுத்தலின் போது பழைய விவரங்கள் நீக்கப்படும். புதிய உரிமையாளர் வாகனத்தை மீண்டும் பதிவு செய்து புதிய QR குறியீட்டை உருவாக்க வேண்டும்.
15. பதிவு வெற்றிகரமாக முடிந்தது, ஆனால் லொகின் செய்யும் போது “தொடர்பு இலக்கம் இல்லை” என வருகிறது.
வாகனத்தை மீண்டும் பதிவு செய்ய முயற்சிக்கவும். பிரச்சினை தொடர்ந்தால், சரியான விவரங்களுடன் புகாரளிக்கவும்.
16. லொகின் செய்ய முடியவில்லை, ஆனால் வாகனம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது என காட்டுகிறது.
இதனை ஒரு புகாராக (Complaint) சமர்ப்பிக்கவும். மேலதிக விசாரணைக்காக வாகன மற்றும் தொடர்பு விவரங்களை வழங்கவும்.
17. பழைய உரிமையாளர் எரிபொருள் பெற்றிருந்தால், புதிய உரிமையாளருக்கு முழு ஒதுக்கீடு கிடைக்குமா?
ஆம். புதிய உரிமையாளர் வெற்றிகரமாக மீண்டும் பதிவு செய்து புதிய QR குறியீட்டைப் பெற்றவுடன், முழு எரிபொருள் ஒதுக்கீடும் அவருக்கு வழங்கப்படும்.

எரிபொருளைப் பெற்றுக்கொள்ள QR குறியீட்டு முறை!

அமுல் திகதி: 15 மார்ச் 2026

வீடியோ விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது

வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு (Quota)

வாகன வகை அளவு (லீற்றர்)
பேருந்துகள் (Buses)60 L
மோட்டார் சைக்கிள்கள்5 L
வேன்கள் (Vans)40 L
கார்கள் (Cars)15 L
மோட்டார் லாரிகள்200 L
காணி வாகனங்கள் (Land Vehicles)15 L
முச்சக்கர வண்டிகள்15 L
விசேட தேவை வாகனங்கள்40 L

QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ளும் முறை

1. ஏற்கனவே பதிவு செய்தவர்கள்:

  • தகவல்கள் மாறவில்லை எனில்: நள்ளிரவு முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
  • தகவல்கள் (உரிமையாளர்/தொலைபேசி) மாறியிருந்தால்: காலை 6.00 மணி முதல் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.

2. புதிய பதிவுகள்:

  • இதுவரை பதிவு செய்யாதவர்கள் மற்றும் புதிய (RMV) வாகனங்கள் காலை 6.00 மணி முதல் இணையதளத்தில் பதியலாம்.

VIDEO ↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓

நீங்கள் எவ்வாறு பதிவு செய்து கொள்வது?..

பதிவு செய்வதற்கு முன்னர் உங்கள் கையில் தயாராக வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் கீழ் வருமாறு..

  • 1. உங்கள் தேசிய அடையாள அட்டை
  • 2. உங்கள் வாகனத்தின் பதிவு இலக்கம்( உதார்ணம் – BAW 1234)
  • 3.வாகன chasis இலக்கம் -( புகை பரிசோதனை report இல் அதனை பார்க்க முடியும்)

உங்கள் தொலைபேசி அல்லது கணினியை பயன்படுத்தி கீழ்வரும் லிங்கை கொண்டு உங்கள் பதிவை ஆரம்பியுங்கள்..

REGISTER LINKCLICK HERE

NOTE -இன்னும் இணையதளம் வேலை செய்யவில்லை எனின் சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சி செய்யவும்

கொடுக்கப்பட்டுள்ள register லிங்கில் கிளிக் செய்யவும்.. பின்வருமாறு ஒரு திரை தோன்றும்..அதில் register என்பதை கிளிக் செய்யவும்.. அதற்கு முன்னர் தமிழ் என்பதை தெரிவு செய்து கொள்ளவும்..

கீழே  ஒவ்வொரு படிமுறையும் தமிழ் மொழியில் எழுத்து வடிவமாக மற்றும் புகைப்பட வடிவமாக கொடுக்கப்பட்டுள்ளது..அதனை பார்த்தும் உங்களால் ரெஜிஸ்டர் செய்ய முடியும் 

படிமுறை 2- உங்கள் திரையில் தகவல்களை ஒழுங்காக நிரப்பவும்..அடையாள அட்டை இலக்கத்தை நிரப்பிய பின்னர் உங்கள் கையில் தற்பொழுது இருக்கும் தொலைபேசி இலக்கத்தை கொடுத்து send OTP என்பதை அழுத்தவும்.உங்கள் . தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக ஒரு குறுஞ்செய்தி கிடைக்கும் .. குறுஞ்செய்தியில் ஒரு இலக்கம் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும்..

அதனை மற்றைய பெட்டியில்  நிரப்பி verify என்பதை அழுத்தவும்.. இலக்கம் சரியாக இருப்பின் அடுத்த படிமுறைக்கு செல்லலாம்..அடுத்ததாக உங்கள் முழு பெயரை நிரப்பிக் கொள்ளவும்.. நீங்கள் வசிக்கும் முகவரியை அடுத்ததாக நிரப்பிக் கொள்ளுங்கள்..

Next என்பதை அழுத்தவும்.. இப்பொழுது உங்களுக்கு தோன்றும் திரையில் வாகனம் தொடர்பான விவரங்கள் கேட்கப்படும்.. உங்கள் வாகன பதிவிலக்கத்தை நிரப்பவும்..

உங்கள் வாகன chasis இலக்கத்தை நிரப்பவும்.. எந்த வாகனத்தை பயன்படுத்துகின்றீர்கள் என்பதையும் தெரிவு செய்து கொள்ளுங்கள்.உங்கள் வாகனத்துக்கு தேவையான எரிபொருள் டீசெல் அல்லது பெட்ரோல் ஆ என்பதை அழுத்தவும்..எல்லாவற்றுக்கும் இறுதியாக ரெஜிஸ்டர் என்பதை அழுத்தியவுடன் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இறுதியில் registration successful என தோன்றும்.. 

உங்களுக்கு ஒரு கருப்பு நிற QR CODE காண்பிக்கப்படும்..அதனை டவுன்லோட் செய்து வைத்து கொள்ளவும்..

முக்கிய குறிப்புகள்..

QR CODE அவ்வாறு தோன்றாத பட்சத்தில் அல்லது registration fail என்று தோன்றினால் சிறிது நேரம் பொறுத்து இருக்கவும் .. ஏன் எனில் பலருக்கு registration fail தோன்றிய போதிலும் அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக நீங்கள் வெற்றிகரமாக பதிவு செய்து விட்டீர்கள் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.. அவ்வாறு.. உங்களுக்கு கூட நடக்கலாம்..

சில மணி நேரம் காத்திருந்த பின்னும் உங்களுக்கு அப்படி ஒரு குறுஞ்செய்தி தோன்றவில்லை எனின் மீண்டும் ஒரு தடவை முயற்சி செய்யவும்.. தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக கூட உங்கள் பதிவு வெற்றிகரம் அடையாமல் இருக்கலாம்..

சிலருக்கு வாகன chasis இலக்கம் தவறு என காட்டப்பட்டது.. எனினும் இலக்கம் சரியாக கொடுக்கப்பட்டிருந்த போதிலும் அவ்வாறு காண்பிக்கப்பட்டது.

உங்களுக்கு ஒருவேளை அவ்வாறு நடந்தால் சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சிக்கவும்..