Apply for University of Jaffna’s 3-year Bachelor of Business Management (BBM) External Degree 2024/2025. Deadline: 15.05.2026. GCE A/L qualified students apply now!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் அமைந்த மூன்று வருட கால வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறிக்கு புதிய மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
- க.பொ.த. (உ/த) பரீட்சை – 2024 அல்லது அதற்கு முன்னர் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
- பொது அறிவுப் பரீட்சையில் ஆகக்குறைந்தது 30% ஆன புள்ளிகளைப் பெற்று பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
- பௌதீக விஞ்ஞானப்பிரிவு, உயிரியல் விஞ்ஞானப்பிரிவு, வணிகப்பிரிவு, கலைப்பிரிவு மற்றும் தொழினுட்பப்பிரிவு ஆகிய எப்பாடப் பிரிவினரும் விண்ணப்பிக்க முடியும்.
15.05.2026 (வெள்ளிக்கிழமை) பின்னிரவு 11.59 (விண்ணப்ப முடிவுத் திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது)
மேற்படி கற்கைநெறிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் கீழ் குறிப்பிடப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
எமது மாணவர் தரவு முறைமைக்கு (Student Information System-SIS) https://www.odsis.jfn.ac.lk/guest இவ்விணைப்பினூடாக சென்று உங்களுக்கான கணக்கு (account) ஒன்றை முதலில் உருவாக்கி கொள்ளுங்கள்.
இணையவழி விண்ணப்பப் படிவத்தில் கோரப்படும் விடயங்களுக்குச் சரியான விபரங்கள் உள்ளீடு செய்வதனை உறுதி செய்யவும்.
- தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம்
- பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்
- க.பொ.த (உ/த) பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ்
- திருமணச் சான்றிதழ் (திருமணமான பெண் மாணவர்கள் மட்டும்)
- விண்ணப்பக் கட்டணமாக ரூபா 1000 இனை 1267500921504360 என்ற மக்கள் வங்கிக் கணக்கிலக்கத்தில் செலுத்தி பெறப்பட்ட பற்றுச்சீட்டு
கீழ் காட்டப்பட்டுள்ள கொடுப்பனவுச்சீட்டின் மாதிரியை பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணமானது செலுத்தப்பட வேண்டும்:
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தினை தரவிறக்கம் செய்து அதனுடன் கொடுப்பனவுச் சீட்டின் மூலப்பிரதி (Original Slip) மற்றும் பதிவேற்றப்பட்ட ஆவணங்களின் பிரதிகளையும் 22.05.2026 (வெள்ளிக்கிழமை) அல்லது அதற்கு முன்னர் அனுப்பிவைக்கவும்.
பிரதிப்பதிவாளர், திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
கற்கைநெறி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை வழங்கும் நமது whatsappகுழுவில் இணைய – ceylonvacancy.com/wg
Join Hereயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
17.04.2026