Apply for the 2026/27 Romanian Undergraduate Scholarships for Sri Lankan students. Offered by the Government of Romania through the Ministry of Education. Open for 2024/2025 A/L students. Deadline: May 12, 2026.
ரொமேனிய இளங்கலை புலமைப்பரிசில் – 2026/27
(Romanian Undergraduate Scholarships)
இந்த அறிவித்தல் இலங்கை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் (உயர்கல்விப் பிரிவு) வெளியிடப்பட்டுள்ளது.
1. பொதுவான தகைமைகள்:
- விண்ணப்பதாரர் இலங்கை பிரஜையாக இருக்க வேண்டும்.
- 2024 அல்லது 2025 ஆம் ஆண்டு உயர்தர (A/L) பரீட்சையில் எந்தவொரு பாடத்துறையிலும் குறைந்தது 3 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
- ஆங்கில அறிவு: சாதாரண தரத்தில் ‘C’ சித்தியும், உயர்தரத்தில் ‘S’ சித்தியும் பெற்றிருத்தல் அவசியம்.
- இலங்கை அரச பல்கலைக்கழகம் ஒன்றில் உள்வாரி மாணவராகத் தெரிவு செய்யப்பட்டு, தற்போது கல்வி கற்பவராகவோ அல்லது பதிவு செய்தவராகவோ இருக்கக்கூடாது.
- நல்ல ஆரோக்கியத்துடன் இருத்தல் வேண்டும்.
- ஏற்கனவே ரொமேனிய அரசாங்கத்தின் இளங்கலை புலமைப்பரிசிலைப் பெற்றவராக இருக்கக்கூடாது.
2. கற்கைத் துறை:
மருத்துவத் துறை சார்ந்த படிப்புகள் (Medical professions) நீங்கலாக, ஏனைய எந்தவொரு பாடத்துறையையும் தெரிவு செய்யலாம்.
3. புலமைப்பரிசில் சலுகைகள்:
- கற்பித்தல் மற்றும் பதிவுக்கட்டணங்கள் இலவசம்.
- மாணவர் விடுதி வசதி (வரம்பிற்குட்பட்டது).
- மாதாந்தக் கொடுப்பனவாக 925lei(181 EURO) வழங்கப்படும்.
- அவசர மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருத்துவ உதவி.
4. முக்கிய விபரங்கள்:
- விண்ணப்பிக்கும் முறை: இணையத்தளம் வழியாக மட்டுமே (Online Only).
- கடைசித் திகதி: 2026 மே மாதம் 12 ஆம் திகதி.
- தெரிவு முறை: Z-Score மற்றும் நேர்முகப் பரீட்சை அடிப்படையில்.
Online Application – விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான வழிகாட்டல் வாட்ஸாப்ப் குழுவில் இணைய கிளிக் செய்யவும்
English Notice Images: