Management Assistant Vacancy 2026 – Ayurvedic Medical Council Sri Lanka

Apply for Management Assistant Grade III (Non-Technical) at the Ayurvedic Medical Council under the Ministry of Health. Check eligibility, salary scale, and application process for 2026.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு

ஆயுர்வேத மருத்துவச் சபை

தமிழ் வர்த்தமானி இன்னும் வெளியாகவில்லை வெளியான பின்னர் விண்ணப்பிக்கவும்
சிங்கள வர்த்தமானி (Sinhala Gazette) – பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்
முகாமைத்துவ உதவியாளர் தரம் III தொழில்நுட்பம் சாராத (MA 1-2) பதவிக்கான விண்ணப்பங்கள் கோரல் – (தமிழ் மொழி மூலம்)

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் இயங்கும் மகரகம, நாவின்னவில் அமைந்துள்ள ஆயுர்வேத மருத்துவச் சபையின் மேற்சொன்ன பதவிக்காக தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இப்பதவியானது ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றுக்கு உரித்துடைய நிரந்தரப் பதவியாகும்.

ஆட்சேர்ப்புக்கான தகுதிகள்:
  • i. இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
  • ii. பதவிக்குரிய கடமைகளை செம்மையாக நிறைவேற்றுவதற்கும் தீவின் எந்தவொரு பகுதியிலும் பணியாற்றுவதற்கும் தேவையான உடல் மற்றும் உள ரீதியான தகுதியைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • iii. நற்பண்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.

குறிப்பு: இப்பதவிக்கு தமிழ் மொழியில் பணியாற்றுவதற்காக ஆட்சேர்ப்பு செய்யப்படுவர். சிங்கள மொழி அறிவானது மேலதிக தகுதியாகக் கருதப்படும்.

கல்வித் தகுதிகள்:
  • i. க.பொ.த (சாதாரண தர): சிங்களம்/தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் ஏனைய இரண்டு பாடங்கள் உள்ளடங்கலாக 06 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல் (சம்பூர்ண சித்தியுடன்).
  • ii. க.பொ.த (உயர் தர): (பொதுப் பரீட்சை நீங்கலாக) மூன்று பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.
  • iii. கணினி அறிவு: அரசினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றில் 06 மாதங்களுக்கு குறையாத கணினிப் பாடநெறியை (MS Office) பூர்த்தி செய்திருப்பது மேலதிக தகுதியாகக் கருதப்படும்.
வயது எல்லை:

18 வயதிற்கு குறையாதவராகவும் 45 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

சம்பள விபரம்:
சம்பளக் குறியீடு: MA 1-2
சம்பள அளவுத்திட்டம்: ரூபா. 46,220 – 10×540 – 7×630 – 12×1,080 – 12×1,280 – ரூபா. 84,350.
01.01.2026 திகதிப்படி ஆரம்பச் சம்பளம்: ரூபா. 43,312/-
விண்ணப்பிக்கும் முறை:

பூரணப்படுத்தப்பட்ட சுயவிபரக்கோவை மற்றும் சான்றிதழ் பிரதிகளுடன், பதிவுத் தபாலில் 2026 ஜூலை மாதம் 03 ஆம் திகதிக்கு முன்னர் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

முகவரி:
தலைவர்,
ஆயுர்வேத மருத்துவச் சபை,
நாவின்ன, மகரகம.