open Exam for Company Inspector Grade III -Registrar of Companies
அரச வர்த்தமானி அறிவித்தல் – 2026
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு
நிறுவனங்களின் பதிவாளர் திணைக்களம்: கம்பனிப் பரிசோதகர் தரம் III
1. விண்ணப்பம் மற்றும் முக்கிய திகதிகள்
- விண்ணப்பிக்கும் முறை: இணையவழியில் (Online) மட்டுமே
- இணையதளம்: www.doenets.lk
- ஆரம்ப திகதி: 2026.06.15
- முடிவுத் திகதி: 2026.07.13
- பரீட்சை: 2026 செப்டம்பர் (கொழும்பு)
- இணையவழி விண்ணப்பம் (Apply Online)
2. தகைமைகள் (Qualifications)
- கல்வி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டதாரி (Degree).
- வயது: 13.07.2026 அன்று 21 – 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
- பிறந்த திகதி: 1991.07.13 முதல் 2005.07.13 வரை.
- இலங்கைப் பிரஜையாகவும் நற்பண்பு உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பரீட்சை விபரங்கள்
1. மொழித் திறன்
100 புள்ளிகள் | நேரம்: 2 மணி
(சித்தி பெற 40% தேவை)
100 புள்ளிகள் | நேரம்: 2 மணி
(சித்தி பெற 40% தேவை)
2. ஆற்றல் (Aptitude)
100 புள்ளிகள் | நேரம்: 1 மணி
(சித்தி பெற 40% தேவை)
100 புள்ளிகள் | நேரம்: 1 மணி
(சித்தி பெற 40% தேவை)
• மொழிகள்: சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம்.
4. நியமனம் மற்றும் சம்பளம்
- வெற்றிடங்கள்: 06
- தன்மை: நிரந்தரம் மற்றும் ஓய்வூதியம் உரித்துடையது.
- சம்பளம்: ரூ. 53,060 – 94,100 (MN-4/2025 அளவுத்திட்டம்).
- பயிற்சி: 3 வருட தகுதிகாண் பருவம்.
5. கட்டணம் மற்றும் செலுத்தும் முறை
- கட்டணம்: ரூபா 600.00
- Card (Credit/Debit), Online Banking அல்லது BOC வங்கிக் கிளைகளில் செலுத்தலாம்.
6. முக்கிய அறிவுறுத்தல்கள்
- விண்ணப்பங்களை ஆங்கிலத்தில் மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும்.
- அடையாளத்திற்காக NIC, கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் அவசியம்.
- அரசு ஊழியர்கள் திணைக்களத் தலைவரூடாக விண்ணப்பப் பிரதியை சமர்ப்பிக்க வேண்டும்.
- மேலதிக விபரங்களுக்கு: சிங்கள வர்த்தமானி (Sinhala Gazette)