SLAS open&Limited Exam 2026 Update
SLAS தொடர்பான முழுமையான வழிகாட்டலை பெற்றுக் கொள்ள
நமது WhatsApp குழுவில் இணையுங்கள்இலங்கை நிர்வாக சேவையின் (SLAS) 150 வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும்..விரைவில் வர்த்தமானி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது
இலங்கை நிர்வாக சேவைக்கு (SLAS) 150 அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திட்டங்களை பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை அதிகாரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உதவும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்ப தகைமைகள்
திறந்த போட்டிப் பரீட்சை: ஏதேனும் ஒரு பட்டத்தை பூர்த்தி செய்திருத்தல் போதுமானது.
வயதெல்லை:(OPEN) கடந்த முறை 22-28 வரை கேட்கப்பட்டிருந்தது. எனினும் இம்முறை 32 வயது வரை வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை: அங்கீகரிக்கப்பட்ட பட்டம் + 5 வருட அரச சேவை அல்லது பட்டம் இன்றி 10 வருட நிரந்தர அரச சேவை(LAST TIME AGE LIMIT 53).
வர்த்தமானி வெளியான பின்னர் மேலதிக விபரங்கள் எமது WhatsApp குழுவில் உடனுக்குடன் பகிரப்படும்.
SLAS சேவையின் நன்மைகள்
- 1. சமூக அந்தஸ்து மற்றும் கௌரவம் இலங்கையின் “Premier Civil Service” என்று அழைக்கப்படும் இச்சேவை, அரசாங்கத்தின் கொள்கைகளை தீர்மானிக்கும் உயர்மட்ட பதவியாகும்.
- 2. பதவி உயர்வு வாய்ப்புகள் அமைச்சின் செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர் அல்லது ஜனாதிபதியின் செயலாளர் வரை உயரும் வாய்ப்பு உண்டு.
- 3. சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் Staff Grade அதிகாரிகளுக்கான உயரிய சம்பளம், வாழ்க்கைச் செலவு மற்றும் விசேட பணி சார்ந்த கொடுப்பனவுகள் கிடைக்கும்.
- 4. வாகன வசதி உயர் தரங்களுக்கு பதவி உயர்வு பெறும்போது உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படும்.
- 5. பயிற்சிகள் மற்றும் வெளிநாட்டுப் படிப்பு அரசாங்கத்தின் புலமைப்பரிசில் திட்டங்கள் மூலம் வெளிநாடுகளில் முதுகலை பட்டப்படிப்புகளை மேற்கொள்ள வாய்ப்பு உண்டு.
- 6. தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பிரதேச செயலாளர் அல்லது பணிப்பாளர் போன்ற பதவிகளில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் நேரடி அதிகாரம் கிடைக்கும்.
மேலதிக விபரங்களுக்கு இப்போதே குழுவில் இணையுங்கள்
நமது WhatsApp குழுவில் இணையுங்கள்