Meteorological Observer/Communicator Vacancies (Open exam) 2026 – Meteorology Dept

Meteorological Observer/Communicator Vacancies (Open exam) 2026 – Meteorology Dept


வளிமண்டலவியல் அவதானிப்பாளர் / தொடர்பாளர் ஆட்சேர்ப்பு – 2026

வளிமண்டலவியல் திணைக்களம்

📢 தமிழ் வர்த்தமானி இன்னும் வெளியாகவில்லை. வெளியானதும் எமது வாட்ஸ்அப் குழுவில் பகிரப்படும்.
பயிற்சி தரம் (Trainee Grade)
முடிவுத் திகதி 2026.08.13
வெற்றிடங்கள் 47
வயது எல்லை 18 – 30 (1996.08.13 – 2008.08.13 இடையில் பிறந்தவர்கள்)
பரீட்சை கட்டணம் ரூபா 600/-
கல்வித் தகைமைகள்

I. க.பொ.த (சாதாரண தர):

  • சிங்களம்/தமிழ்/ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் கணிதம் உட்பட 6 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியடைந்திருத்தல்.
  • மேற்கூறிய பாடங்களில் குறைந்தது ஒரு பாடத்திற்காவது திறமைச் சித்தி (Credit Pass) பெற்றிருக்க வேண்டும்.

II. க.பொ.த (உயர் தர):

ஒரே அமர்வில் 3 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். பாடக் கலவை பின்வருமாறு அமைதல் அவசியம்:

முறை 01:

பௌதிகவியல் (Physics), தூய கணிதம் (Pure Math) மற்றும் பிரயோக கணிதம் (Applied Math).


முறை 02:

பௌதிகவியலுடன் (Physics) பின்வரும் இரு தொகுதிகளில் இருந்தும் தலா ஒரு பாடம்:

  • தூய கணிதம் / பிரயோக கணிதம் / இணைந்த கணிதம்.
  • மற்றும் இரசாயனவியல் / விவசாய விஞ்ஞானம் / தகவல் தொழிநுட்பம் (ICT) / கணினி விஞ்ஞானம்.
மேலதிக விபரங்கள்

தெரிவு செய்யப்படுபவர்கள் 2 வருட பயிற்சிக்கு உட்படுத்தப்படுவர். பயிற்சியின் பின் 5 வருடங்கள் கட்டாயம் சேவையாற்ற வேண்டும் (ரூபா 250,000 க்கான பிணை ஒப்பந்தம் அவசியமாகும்).