VTA Job Vacancies 2026 | Management Assistant, Training Officer & Director Posts

VTA Job Vacancies 2026 | Management Assistant, Training Officer & Director Posts

join whatsapp groupjoin

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை (VTA)

தகுதியுள்ள இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

முழுமையான அறிவித்தல் (Full Notice)

01. முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant)

MA 1-2

சம்பள விபரம்:
2027.01.01 முதல் அடிப்படைச் சம்பளம்: ரூ. 46,220 – 84,350/-
2025.01.01 முதல் ஆரம்பச் சம்பளம்: ரூ. 43,312/- (அரசாங்க கொடுப்பனவுகளுடன்)
தகைமைகள் (வெளிவாரி):
  • க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் சிங்களம்/தமிழ், கணிதம் மற்றும் ஏனைய 4 பாடங்கள் உட்பட ஒரே அமர்வில் 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல். (04 பாடங்களில் திறமைச் சித்தி அவசியம்).
  • க.பொ.த (உயர்தர) பரீட்சையில் 03 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.
தகைமைகள் (உள்வாரி):
  • ஆரம்ப மட்ட ஊழியராக (திறமையற்ற/அரை தகுதியுள்ள) 05 வருட நிரந்தர சேவையை பூர்த்தி செய்திருத்தல்.
  • கணினி அறிவுச் சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம்.

வயது எல்லை: 18 – 45 ஆண்டுகள்.

விண்ணப்பப்படிவம் (MA Application)

02. நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் (Programme Officer)

MA 4

சம்பள விபரம்:
2027.01.01 முதல் அடிப்படைச் சம்பளம்: ரூ. 64,320 – 113,170/-
2026.01.01 முதல் ஆரம்பச் சம்பளம்: ரூ. 58,598/-
தகைமைகள் (வெளிவாரி):
  • பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பட்டத்தைப் பெற்றிருத்தல்.
தகைமைகள் (உள்வாரி):
  • மேலே குறிப்பிட்ட வெளிவாரி தகைமைகளைக் கொண்டிருத்தல்.
  • அல்லது “முகாமைத்துவ உதவியாளர் – தொழிற்நுட்பம் அல்லாத” (MA 1-2) பதவியில் 08 வருட திருப்திகரமான சேவையை பூர்த்தி செய்திருத்தல்.

வயது எல்லை: 22 – 45 ஆண்டுகள்.

விண்ணப்பப்படிவம் (Download Application)

03. பணிப்பாளர் (மனிதவளம் மற்றும் நிர்வாகம்)

HM 1-1

தகைமைகள் (வெளிவாரி):
  • அங்கீகரிக்கப்பட்ட பட்டத்துடன் தொடர்புடைய துறையில் முதுகலை பட்டம் (Postgraduate degree).
  • அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தில் “முகாமைத்துவ” (Managerial) மட்டத்தில் 15 வருட அனுபவம்.

வயது எல்லை: 35 – 55 ஆண்டுகள்.

விண்ணப்பப்படிவம் (Download Application)

04. உதவிப் பணிப்பாளர் (மாவட்ட / தொழில் வழிகாட்டல்)

MM 1-1

தகைமைகள் (வெளிவாரி):
  • பொறியியல் (சிவில்) பட்டம் அல்லது தொடர்புடைய துறையில் BSc பட்டம் + 01 வருட அனுபவம்.
  • அல்லது NVQ 7 தகைமையுடன் 01 வருட அனுபவம்.
  • அல்லது NDT / NDES / HNDE / NVQ 6 தகைமையுடன் 06 வருட அனுபவம்.

வயது எல்லை: 22 – 45 ஆண்டுகள்.

விண்ணப்பப்படிவம் (Download Application)

05. பயிற்சி உத்தியோகத்தர் (Training Officer)

JM 1-1

தகைமைகள்:
  • தொடர்புடைய துறையில் BSc பட்டம்.
  • அல்லது NVQ Level 7 சான்றிதழ்.
  • அல்லது NDT/NDES/HNDE/NVQ 6 உடன் 05 வருட அனுபவம்.

வயது எல்லை: 22 – 45 ஆண்டுகள்.

விண்ணப்பப்படிவம் (Download Application)

06. வரைவாளர் (Draughtsman – ஒப்பந்த அடிப்படையில்)

MA 2-2

தகைமை: NVQ Level 5 மட்டத்திலான தொழிற்நுட்ப பாடநெறியை பூர்த்தி செய்திருத்தல். ஒரு வருட அனுபவம் மேலதிக தகுதியாகக் கருதப்படும்.

மாதாந்த கொடுப்பனவு: ரூ. 43,379/- + அரச கொடுப்பனவுகள்.

விண்ணப்பப்படிவம் (Download Application)
விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்ப முடிவுத் திகதி: 2026 ஆகஸ்ட் 03
  • நிர்வாகக் கட்டணம் ரூ. 1,000.00 ஐ மக்கள் வங்கியின் (People’s Bank) நாரஹேன்பிட்ட கிளையில் உள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் கணக்கு இலக்கம்: 119-1-001-9-3693223 இல் வைப்புச் செய்து, பற்றுச்சீட்டை இணைக்க வேண்டும்.
  • விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் (Registered Post) மாத்திரம் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பவும்.
  • உறையின் இடது மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை தெளிவாகக் குறிப்பிடவும்.