Sri Lanka Foreign Service Exam Application 2026

Sri Lanka Foreign Service Exam Application 2026

திருத்த அறிவித்தலுடன் புதுப்பிக்கப்பட்டது (Updated with Amendment)

இலங்கை வெளிநாட்டு சேவை (Grade III) – 2026
திறந்த போட்டிப் பரீட்சை மற்றும் ஆட்சேர்ப்பு

முக்கிய திருத்த அறிவித்தல் (2026.10.16 ஆம் திகதிய வர்த்தமானி):

2026 செப்டம்பர் 04 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தலில் கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதுடன், உச்ச வயது எல்லையும் தளர்த்தப்பட்டுள்ளது:

  • நீடிக்கப்பட்ட விண்ணப்ப முடிவுத் திகதி: 2026 அக்டோபர் 30, பி.ப. 09:00 வரை (மீள விண்ணப்ப ஏற்பு: 19.10.2026 மு.ப. 09:00 இலிருந்து).
  • அதிகபட்ச வயது எல்லை தளர்வு: திறந்த விண்ணப்பதாரிகளுக்கான உச்ச வயது எல்லை 35 ஆகவும், அரச ஊழியர்களுக்கான உச்ச வயது எல்லை 40 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • தகைமைகள் கணிக்கும் திகதி: தகைமைகள் பரிசீலிக்கப்படும் அடிப்படைத் திகதி மாற்றமின்றி 06.10.2026 என்றே கணிக்கப்படும்.

இலங்கை வெளிநாட்டு சேவையின் (Sri Lanka Foreign Service) தரம் III இற்கான 25 வெற்றிடங்களை நிரப்புவதற்காக இலங்கை அரசாங்கத்தின் அரச சேவை ஆணைக்குழுவினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

  • வெற்றிடங்கள்: 25
  • விண்ணப்பங்கள் ஆரம்பம்: 2026 செப்டம்பர் 07 (மீள திறப்பு: 2026 அக்டோபர் 19)
  • விண்ணப்ப முடிவுத் திகதி: 2026 அக்டோபர் 30, பி.ப. 09:00
  • பரீட்சை மையம்: கொழும்பு
  • பரீட்சை திகதி: 2026 நவம்பர் (குறிப்பிட்ட திகதி பின்னர் அறிவிக்கப்படும்)

01. அடிப்படைத் தகைமைகள்

கல்வித் தகைமை:

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு அல்லது உள்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றின் பட்டத்தைப் (Degree) பெற்றிருத்தல் வேண்டும், அல்லது பாராளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட பல்கலைக்கழகப் பட்டம், அல்லது 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் பிரிவு 25A இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பட்டத்தைப் பெற்றிருத்தல் வேண்டும்.

வயது எல்லை (திருத்தப்பட்டதன் படி – 06.10.2026 அன்றைய திகதிக்கு):

  • திறந்த விண்ணப்பதாரிகள் (Open Candidates): 22 வயதை அடைந்தவராகவும் 35 வயதை விஞ்சாதவராகவும் இருத்தல் வேண்டும். (பிறந்த திகதி 06.10.1991 இற்கும் 06.10.2004 இற்கும் இடைப்பட்டதாக அமைந்திருக்க வேண்டும்).
  • அரசு ஊழியர்கள் (Candidates in Public Service): 40 வயதை விஞ்சாதவராக இருத்தல் வேண்டும். (பிறந்த திகதி 06.10.1986 அன்று அல்லது அதன் பின்னர் அமைந்திருக்க வேண்டும்) அத்துடன் திருப்திகரமான சேவைக் காலப் பதிவினைக் கொண்டிருத்தல் வேண்டும்.

ஏனைய தகைமைகள்:

  • இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும் (இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் தமது வெளிநாட்டுக் குடியுரிமையை ரத்துச் செய்ய உடன்பட வேண்டும்).
  • நன்நடத்தை உடையவராக இருத்தல் வேண்டும் (நேர்முகத் தேர்வின் போது பொலிஸ் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்).
  • குருத்துவ அல்லது மத அமைப்புகளில் தீட்சை பெற்ற துறவிகள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
  • ஒருவர் இப்பரீட்சைக்கு அதிகபட்சமாக 3 தடவைகள் மட்டுமே தோற்ற முடியும்.

02. சம்பள விபரம்

SL-1-2025 Salary Scale

பொது நிருவாக சுற்றறிக்கை 10/2025 இன் படி மாதாந்த சம்பள அளவுத்திட்டம்:

ரூபா 82,150 – 10×2,400 – 8×2,940 – 17×3,900 – ரூபா 195,970 (மாதாந்தம்).

03. எழுத்துப் பரீட்சை விபரங்கள்

பரீட்சை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்படும். விண்ணப்பித்த மொழியிலேயே அனைத்து வினாத்தாள்களுக்கும் விடையளிக்க வேண்டும் (மொழியைப் பின்னர் மாற்ற முடியாது).

பாடம் இல. பாடம் கால அளவு மொத்த புள்ளி சித்திப் புள்ளி
01பொது வினாத்தாள் (General Paper)03 மணித்தியாலம்10040
02உலக விவகாரங்கள் I (World Affairs I)03 மணித்தியாலம்10040
03உலக விவகாரங்கள் II (World Affairs II)03 மணித்தியாலம்10040
04கட்டுரை (Essay)03 மணித்தியாலம்10040
05சுருக்கமெழுதுதல் (Précis)30 நிமிடங்கள்5025
06MCQ வினாத்தாள் (IQ + பொது அறிவு மற்றும் நடப்பு விவகாரங்கள்)02 மணி 30 நிமிடம்15075
07மொழித் தேர்ச்சி (Language Proficiency)03 மணித்தியாலம்10040
கவனிக்க: சகல விண்ணப்பதாரிகளும் முதலில் MCQ வினாத்தாளுக்குத் தோற்றுவது கட்டாயமாகும். MCQ வினாத்தாளில் குறைந்தபட்ச சித்திப் புள்ளிகளைப் (75) பெறுபவர்களுக்கு மட்டுமே ஏனைய வினாத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும்.

04. தகைமை மதிப்பீட்டு நேர்முகத் தேர்வு (100 புள்ளிகள்)

எழுத்துப் பரீட்சையின் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடைந்து, மொத்தமாக ஆகக் குறைந்தது 300 புள்ளிகளைப் பெற்றுத் தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரிகளில் இருந்து (வெற்றிடங்களின் எண்ணிக்கையை விட 5 மடங்குக்கு மேற்படாதவாறு) நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

மதிப்பீட்டு விடயங்கள் விபரம் / புள்ளிப் பிரிவு அதிகபட்ச புள்ளி
01. மேலதிக கல்வித் தகைமைகள் (வகுப்புச் சித்தி) சிறப்புப் பட்டம் (1st Class – 20, 2nd Upper – 18, 2nd Lower – 16)
பொதுப் பட்டம் (1st Class – 18, 2nd Upper – 16, 2nd Lower – 14)
20
02. ஏனைய தொழில்முறைத் தகைமைகள் Post Graduate Degree (15), Post Graduate Diploma (13), Diplomas (08 – 10) 15
03. ஆங்கில மொழித் தேர்ச்சி English Special Degree (15), Major Subject (08), English Medium Degree / Diploma / IELTS 6.0+ / TOEFL (07), A/L English (02 – 05) 15
04. வெளிநாட்டு மொழித் தேர்ச்சி
(Arabic, Chinese, French, German, Hindi, Italian, Japanese, Korean, Russian, Spanish)
பட்டத்தில் ஒரு பாடம் (10), G.C.E. A/L (06 – 09), G.C.E. O/L (02 – 05), அரச அங்கீகாரம் பெற்ற டிப்ளோமா (03 – 05) 10
05. கணினித் திறன்கள் (Computer Skills) Degree (05), Diploma (02 – 03) 05
06. உத்தியோகபூர்வ மொழித் தேர்ச்சி
(தோற்றிய மொழி தவிர்ந்த மற்றைய மொழி – Sinhala / Tamil)
O/L முதலாம் மொழி (02 – 06), O/L இரண்டாம் மொழி (01 – 04) 10
07. நேர்முகத் தேர்வில் வெளிப்படுத்தப்படும் திறன்கள் ஆளுமை (10), தொடர்பாடல் திறன் (10), நேர்முகத் தேர்வுத் திறன்கள் (05) 25
மொத்தப் புள்ளிகள் 100

05. விண்ணப்பிக்கும் முறை மற்றும் கட்டணம்

  • விண்ணப்பங்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஊடாக ஆங்கில மொழியில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • பரீட்சைக் கட்டணம்: ரூபா 1,200/-
  • கட்டணம் செலுத்தும் முறைகள்: Credit Card, Debit Card, Bank of Ceylon Flex App/Online Banking அல்லது நேரடி BOC வங்கிக் கிளை ஊடாகச் செலுத்த முடியும். (கட்டணம் மீள வழங்கப்பட மாட்டாது).
  • அரசு/மாகாண அரச ஊழியர்கள் தமது விண்ணப்பப் படிவத்தின் பிரதியைத் தம் திணைக்களத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

06. சேவை நிபந்தனைகள்

  • இப்பதவி நிரந்தரமானது மற்றும் ஓய்வூதிய உரித்துடையது (W&OP திட்டத்திற்குப் பங்களிப்புச் செய்தல் வேண்டும்).
  • தெரிவு செய்யப்படும் அதிகாரிகள் 3 வருட தகுதிகாண் காலத்திற்குட்படுவர் (Probation Period). அக்காலப்பகுதிக்குள் முதலாம் வினைத்திறன் தடைப் பரீட்சையில் (1st E.B. Exam) சித்தியடைதல் வேண்டும்.
  • பொது நிருவாக சுற்றறிக்கை 18/2020 இன் படி உரிய அரச கரும மொழித் தேர்ச்சியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
முக்கிய குறிப்பு: விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் விண்ணப்பங்களை இறுதித் திகதியான 2026 அக்டோபர் 30 ஆம் திகதி பி.ப. 09.00 மணிக்கு முன்னர் இணையவழியில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். முழுமையான விதிமுறைகளுக்கு உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தலைப் பார்க்கவும்.

1 Trackback / Pingback

  1. Sri Lanka Foreign Service (open Exam) Application 2026 - Ceylon Vacancy

Comments are closed.