Apply online for the Grade II Agriculture Development Officer Competitive Exam 2026. Check eligibility, salary scale, exam syllabus, and closing dates for the Department of Agriculture Development recruitment.
விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் – தரம் II
Agricultural Development Officer Grade II Examination – 2026
சிங்கள வர்த்தமானி மட்டுமே வெளியாகி உள்ளது. தமிழ் வர்த்தமானி வெளியானதும் நமது வாட்ஸ்அப் குழுவில் பகிரப்படும். குழுவில் இல்லாதவர்கள் இணைந்து கொள்ளலாம்.
1. பொதுவான விபரங்கள்
| திணைக்களம் | விவசாய அபிவிருத்தி திணைக்களம் |
| பதவி | விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் – தரம் II |
| பரீட்சை ஆண்டு | 2026 செப்டம்பர் |
| விண்ணப்ப ஆரம்பத் திகதி | 2026 மே 11 (மு.ப 9.00) |
| முடிவுத் திகதி | 2026 ஜூன் 08 (பி.ப 9.00) |
2. சேவை நிபந்தனைகள்
இப்பதவி நிரந்தரமானது மற்றும் ஓய்வூதியத்திற்கு உட்பட்டது. அரச நிறுவனக் கோவை மற்றும் அரச சேவை ஆணைக்குழுவின் விதிகளுக்கு உட்பட்டு நியமனம் வழங்கப்படும்.
3. தகுதிகள்
- பிரஜாவுரிமை: இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
- வயது: 21 – 35 இற்குள் (1991.06.08 – 2005.06.08).
- கல்வி: UGC அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பட்டத்தைப் பெற்றிருத்தல்.
- குறிப்பு: மதகுருமார்கள் விண்ணப்பிக்க அனுமதி இல்லை.
4. பரீட்சை அமைப்பு
சிங்களம் அல்லது தமிழ் மொழியில் எழுதலாம். இரண்டு வினாப்பத்திரங்கள் உண்டு:
கிரகித்தல்
100 புள்ளிகள் | 1.5 மணிநேரம்
நுண்ணறிவு
100 புள்ளிகள் | 1.5 மணிநேரம்
5. சம்பளம் & பரீட்சைக் கட்டணம்
6. கையொப்ப உறுதிப்படுத்தல்
அனுமதி அட்டையில் பின்வருபவர்களிடம் கையொப்பம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்:
7. மாவட்டக் குறியீடுகள்
| 01 – கொழும்பு | 02 – கம்பஹா | 03 – களுத்துறை | 04 – கண்டி |
| 05 – மாத்தளை | 06 – நுவரெலியா | 07 – காலி | 08 – மாத்தறை |
| 09 – ஹம்பாந்தோட்டை | 10 – யாழ்ப்பாணம் | 11 – மன்னார் | 12 – வவுனியா |