Inland Revenue Service Exam Application 2026

Inland Revenue Service Exam Application 2026

திருத்த அறிவித்தல் – 2026

இலங்கை உள்நாட்டு வருமான சேவை (SLIRS) – தரம் III

ஆதாரம்: 31.07.2026 ஆம் திகதியிட்ட இலக்கம் 2,500 வர்த்தமானி அறிவித்தல்.

01. வயது வரம்பு உயர்வு

விண்ணப்பதாரர்களின் உச்ச வயது வரம்பு 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
(பிறந்த திகதி: 1991.08.31 முதல் 2004.08.31 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்)

02. விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2026 செப்டம்பர் 11 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

⚠️ முக்கிய குறிப்பு: கல்வி மற்றும் ஏனைய தகைமைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய திகதி 2026.08.31 என்பதில் மாற்றமில்லை.

WA முக்கிய அறிவித்தல்

தமிழ் வர்த்தமானி, Online Application மற்றும் Inland Revenue Exam வழிகாட்டலை பெற்றுக்கொள்ள நமது வாட்ஸாப்ப்குழுவில் இணைந்து கொள்ளவும்.

குழுவில் இணையுங்கள் (Join Now)

இலங்கை உள்நாட்டு இறைவரி சேவையின் தரம் III (Grade III) ஆட்சேர்ப்பு – 2026

வர்த்தமானி திகதி: 2026.07.31
பதவியின் பெயர் உள்நாட்டு இறைவரி சேவை தரம் III
வெற்றிடங்கள் 200
ஆட்சேர்ப்பு முறை திறந்த போட்டிப் பரீட்சை
வயது 22 – 35 ஆண்டுகள்

சம்பள விபரம்

ரூபா 82,150 – (10×2400) – (8×2940) – (17×3900) – ரூபா 195,970/-
(இந்தச் சம்பளம் 2027.01.01 முதல் முழுமையாக அமுல்படுத்தப்படும்)

கல்வித் தகுதிகள்

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதலாம் அல்லது இரண்டாம் வகுப்பு (First or Second Class) சித்தியுடன் பெற்ற ஒரு பட்டம் அல்லது
  • இலங்கை உயர்நீதிமன்றத்தின் சட்டத்தரணி (Attorney-at-Law) ஆக இருத்தல் அல்லது
  • இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தின் (CA Sri Lanka) உறுப்பினராக இருத்தல்.

வயது எல்லை

விண்ணப்பதாரிகள் 22 – 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும் (1998.08.31 – 2004.08.31 இற்குள் பிறந்தவர்கள்).

*அரசாங்க ஊழியர்களுக்கான சலுகை: ஏற்கனவே அரசாங்க அல்லது மாகாண சேவையில் நிரந்தர நியமனம் பெற்றிருப்பின், அதிகபட்ச வயது எல்லை 35 ஆண்டுகள் வரை தளர்த்தப்படும்.

பரீட்சை விபரங்கள்

பரீட்சை 2026 அக்டோபர் மாதம் நடைபெறும். தேர்ச்சி பெற ஒவ்வொரு பாடத்திலும் 40% புள்ளிகள் அவசியம்.

பாடம் நேரம் புள்ளிகள்
கிரகித்தல் (Comprehension) 1 ½ மணி 100
நுண்ணறிவுப் பரீட்சை (IQ) 1 மணி 100
பொது அறிவு (General Knowledge) 1 மணி 100

முக்கிய திகதிகள் & கட்டணம்

  • ஆரம்ப திகதி: 2026 ஆகஸ்ட் 03 (காலை 9:00)
  • இறுதி திகதி: 2026 sep 11 (இரவு 9:00)
  • பரீட்சைக் கட்டணம்: ரூபா 1,200/-
  • விண்ணப்ப முறை: ஆன்லைன் (Online) – www.doenets.lk
  • Online Application Link: https://applications.doenets.lk/exams
Download TAMIL Gazette

தற்பொழுது தமிழ் வர்த்தமானி வெளியாகி உள்ளது ..

JOIN INLAND REVENUE WHATSAPP GROUP(CLICK HERE)