Official recruitment for Sri Lanka Police Apprentice Sub Inspector positions. Find eligibility criteria, physical requirements, salary details, and exam structure. Apply online via joinus.police.lk before 05.06.2026.
இலங்கை காவல்துறை – ஆட்சேர்ப்பு அறிவித்தல் 2026
பயிலுநர் உப போலீஸ் பரிசோதகர் (சாதாரண சேவை / விசேட அதிரடிப்படை)
விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.06.05 | விண்ணப்பம் ஆன்லைன் மூலம் மட்டுமே (Online Only)
1. அடிப்படை தகுதிகள்
கல்வித் தகுதி (O/L)
- க.பொ.த (சா/த) பரீட்சையில் ஒரே அமர்வில் 06 பாடங்களில் சித்தி.
- கணிதம், விஞ்ஞானம், சிங்களம்/தமிழ் மற்றும் ஆங்கிலம் உட்பட 05 பாடங்களில் திறமைச் சித்தி (C) கட்டாயம்.
கல்வித் தகுதி (A/L)
- க.பொ.த (உயர் தர) பரீட்சையில் ஒரே அமர்வில் 03 பாடங்களில் சித்தி (பொதுப் பரீட்சை தவிர்ந்த).
2. உடல் தகுதிகள் மற்றும் ஏனையவை
உடல் அளவீடுகள்
- உயரம்: குறைந்தபட்சம் 05 அடி 06 அங்குலம் (167.64 cm).
- மார்பு: குறைந்தபட்சம் 32 அங்குலம் (சுவாசம் உள்ளெடுக்காத போது).
- பார்வை: கண்ணாடி இன்றி இரு கண்களிலும் 6/12 பார்வை (ஒரு கண் 6/6 எனின் மற்றையது 6/18 இருக்கலாம்).
ஏனைய நிபந்தனைகள்
- வயது: 18 – 25 வயது (விண்ணப்பத் திகதியன்று).
- திருமண நிலை: விண்ணப்பத்தின் போது திருமணமாகாதவராக இருக்க வேண்டும்.
- தழும்புகள் அல்லது பச்சை குத்துதல் (Tattoos) உடல் கௌரவத்திற்கு பாதிப்பாக இருக்கக் கூடாது.
3. மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்
| விபரம் | தொகை (ரூபா) |
|---|---|
| அடிப்படை சம்பளம் (RS 03-2025) | 55,410.00 |
| வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு | 17,800.00 |
| உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவு | 31,800.00 |
| அடிப்படை சம்பளத்தில் 22% + 1250 | 13,440.20 |
| கஷ்டப் பிரதேச கொடுப்பனவு | 2,000.00 |
| சீருடை பராமரிப்பு கொடுப்பனவு | 250.00 |
| மொத்த ஆரம்ப கொடுப்பனவு (தோராயமாக) | 120,700.20 |
* பயிற்சிக்கு பின் யாழ்ப்பாண தீவகக் கொடுப்பனவு (3000/-) மற்றும் விசேட அதிரடிப்படை கொடுப்பனவுகள் மேலதிகமாக வழங்கப்படும்.
4. தெரிவுப் பரீட்சை விபரங்கள்
உடல் தகுதித் தேர்வு (Endurance Test)
| செயற்பாடு | தகுதி அளவு |
|---|---|
| 1000m ஓட்டம் | 05 நிமிடங்களுக்குள் (03 நிமிடத்திற்குள் 30 புள்ளிகள்) |
| Chin-ups | 05 முறைகள் (01 நிமிடம்) |
| Push-ups | 15 முறைகள் (01 நிமிடம்) |
| Sit-ups | 15 முறைகள் (01 நிமிடம்) |
| Kim’s Gem | நினைவாற்றல் சோதனை (பொருட்களை நினைவில் வைத்தல்) |
சித்தி புள்ளிகள்: சாதாரண சேவைக்கு 50%, விசேட அதிரடிப்படைக்கு 60% புள்ளிகள் அவசியம்.
5. தரவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் (Upload Documents)
- பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate).
- தேசிய அடையாள அட்டை (NIC).
- கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் (O/L & A/L Certificates).
- செல்லுபடியாகும் வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம்.
- வெள்ளை பின்னணியில் எடுக்கப்பட்ட கடவுச்சீட்டு அளவு வர்ண புகைப்படம்.
- தற்போது அரச பணியில் இருப்பின், திணைக்களத் தலைவரின் அனுமதி கடிதம்.
விண்ணப்பத்தின் அச்சிடப்பட்ட பிரதியை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு முதலாம் நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்ஆதாரம்: இலங்கை அரச வர்த்தமானி 2026.04.30 (பக்கம் 1776 – 1782)