Para Medical Training Courses Application 2026 – Ministry of Health
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு
மருத்துவ சேவைக்கான துணை மருத்துவ சேவையின் பயிற்சி நெறிகளுக்கு மாணவர்களை சேர்த்தல் – 2026
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
📅 விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.08.31
இலங்கை அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் கீழ் உள்ள துணை மருத்துவ சேவைப் பயிற்சி நெறிகளுக்கு தகுதியுள்ள இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
வழங்கப்படும் பயிற்சி நெறிகள்
| இல | பயிற்சி நெறியின் பெயர் | காலம் | மொழி |
|---|---|---|---|
| 01 | பல்தொழில்நுட்பவியலாளர் | 02 வருடங்கள் | ஆங்கிலம் |
| 02 | பொது சுகாதாரப் பரிசோதகர் (PHI) | 02 வருடங்கள் | ஆங்கிலம் |
| 03 | செயற்கை அவயவத் தொழில்நுட்பவியலாளர் | 03 வருடங்கள் | ஆங்கிலம் |
| 04 | சுகாதாரப் பூச்சியியல் அலுவலர் | 02 வருடங்கள் | ஆங்கிலம் |
| 05 | பாடசாலைப் பல் சிகிச்சை உதவியாளர் | 02 வருடங்கள் | ஆங்கிலம் |
| 06 | இதயத்துடிப்புப் பதிவாளர் (ECG/EEG) | 02 வருடங்கள் | ஆங்கிலம் |
| 07 | மருந்து கலவையாளர் (Pharmacist) | 01 வருடம் | ஆங்கிலம் |
| 08 | மூளை மின் இயக்கப்பதிவாளர் | 02 வருடங்கள் | ஆங்கிலம் |
அடிப்படைத் தகுதிகள்
- வயது எல்லை: 2026.08.07 அன்று 18 – 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும் (சில பதவிகளுக்கு 35 வயது வரை).
- கல்வித் தகுதி:
- G.C.E (O/L): ஒரே அமர்வில் கணிதம், அறிவியல், மொழி உட்பட 6 பாடங்களில் சித்தி.(ஒவ்வொரு கற்கை நெறிக்கும் இது மாறுபடும் வர்த்தமானியை வாசிக்கவும் )
- G.C.E (A/L): 2019 – 2023 வரையான ஆண்டுகளில் ஏதேனும் ஒரு அமர்வில் 3 பாடங்களில் சித்தி (விஞ்ஞானப் பிரிவு பாடங்கள் அவசியம்)(ஒவ்வொரு கற்கை நெறிக்கும் இது மாறுபடும் வர்த்தமானியை வாசிக்கவும் ).
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் ரூபா 1000/= ஆகும். இதனை இலங்கை வங்கியின் (Bank of Ceylon) எந்தவொரு கிளையிலும் பின்வரும் கணக்கிற்கு செலுத்த வேண்டும்:
கணக்கு பெயர்: சுகாதார அமைச்சு (Ministry of Health)
கணக்கு இலக்கம்: 7041318
கிளை: தம்பேரோ (Thaprobane Branch)