Para Medical Training Courses Application 2026 – Ministry of Health

Para Medical Training Courses Application 2026 – Ministry of Health

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு

மருத்துவ சேவைக்கான துணை மருத்துவ சேவையின் பயிற்சி நெறிகளுக்கு மாணவர்களை சேர்த்தல் – 2026

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
📅 விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.08.31

இலங்கை அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் கீழ் உள்ள துணை மருத்துவ சேவைப் பயிற்சி நெறிகளுக்கு தகுதியுள்ள இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

வழங்கப்படும் பயிற்சி நெறிகள்

இல பயிற்சி நெறியின் பெயர் காலம் மொழி
01பல்தொழில்நுட்பவியலாளர்02 வருடங்கள்ஆங்கிலம்
02பொது சுகாதாரப் பரிசோதகர் (PHI)02 வருடங்கள்ஆங்கிலம்
03செயற்கை அவயவத் தொழில்நுட்பவியலாளர்03 வருடங்கள்ஆங்கிலம்
04சுகாதாரப் பூச்சியியல் அலுவலர்02 வருடங்கள்ஆங்கிலம்
05பாடசாலைப் பல் சிகிச்சை உதவியாளர்02 வருடங்கள்ஆங்கிலம்
06இதயத்துடிப்புப் பதிவாளர் (ECG/EEG)02 வருடங்கள்ஆங்கிலம்
07மருந்து கலவையாளர் (Pharmacist)01 வருடம்ஆங்கிலம்
08மூளை மின் இயக்கப்பதிவாளர்02 வருடங்கள்ஆங்கிலம்

அடிப்படைத் தகுதிகள்

  • வயது எல்லை: 2026.08.07 அன்று 18 – 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும் (சில பதவிகளுக்கு 35 வயது வரை).
  • கல்வித் தகுதி:
    • G.C.E (O/L): ஒரே அமர்வில் கணிதம், அறிவியல், மொழி உட்பட 6 பாடங்களில் சித்தி.(ஒவ்வொரு கற்கை நெறிக்கும் இது மாறுபடும் வர்த்தமானியை வாசிக்கவும் )
    • G.C.E (A/L): 2019 – 2023 வரையான ஆண்டுகளில் ஏதேனும் ஒரு அமர்வில் 3 பாடங்களில் சித்தி (விஞ்ஞானப் பிரிவு பாடங்கள் அவசியம்)(ஒவ்வொரு கற்கை நெறிக்கும் இது மாறுபடும் வர்த்தமானியை வாசிக்கவும் ).

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் ரூபா 1000/= ஆகும். இதனை இலங்கை வங்கியின் (Bank of Ceylon) எந்தவொரு கிளையிலும் பின்வரும் கணக்கிற்கு செலுத்த வேண்டும்:

கணக்கு பெயர்: சுகாதார அமைச்சு (Ministry of Health)
கணக்கு இலக்கம்: 7041318
கிளை: தம்பேரோ (Thaprobane Branch)