Apply for University of Jaffna BCom Special Degree 2024/2025 (Batch X). Deadline extended to 01.05.2026. A/L Commerce stream students can apply online now!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
வணிகமாணி சிறப்புக் கற்கைநெறி – 2026 | Batch-X (2024/2025)
விண்ணப்ப முடிவுத்திகதி 01.05.2026 (வெள்ளிக்கிழமை) வரை நீடிக்கப்பட்டுள்ளது. (விண்ணப்ப முடிவுத் திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது)
- க.பொ.த. (உ/த) பரீட்சை (வணிகப்பிரிவு) – 2024 அல்லது அதற்கு முன்னர் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதியானவர்கள்.
- அல்லது பல்கலைக்கழக மூதவையினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய க.பொ.த. (உ/த) பரீட்சைக்கு சமமான தகைமையைக் கொண்டவர்கள்
விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் (Z-score) அல்லது பொது உளச்சார்புப்பரீட்சை அல்லது நேர்முகப் பரீட்சை அல்லது மூன்றின் மூலமும் தெரிவு செய்யப்படுவார்கள். பொது உளச்சார்புப் பரீட்சைக்கான தேவை ஏற்படின் பரீட்சை நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
மேற்படி கற்கைநெறிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் கீழ் குறிப்பிடப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
1. எமது மாணவர் தரவு முறைமைக்கு (Student Information System – SIS) https://www.odsis.jfn.ac.lk/guest இவ்விணைப்பினூடாக சென்று உங்களுக்கான கணக்கு (account) ஒன்றை முதலில் உருவாக்கி கொள்ளுங்கள்.
இணையவழி விண்ணப்பப் படிவத்தில் கோரப்படும் விடயங்களுக்குச் சரியான விபரங்கள் உள்ளீடு செய்வதனை உறுதி செய்யவும்.
மாணவர்களின் விபரம் மற்றும் தகைமைகளை பரிசீலிக்க ஏதுவாக பின்வரும் ஆவணங்களின் மூலப்பிரதி நகல் செய்யப்பட்டு (Scan) பதிவேற்றப்படல் வேண்டும்:
- தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம்
- பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்
- க.பொ.த (உ/த) பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ் (2024 அல்லது அதற்கு முற்பட்டது) அல்லது அதற்கு சமனான கல்வித்தகைமைச் சான்றிதழ்
- திருமணச் சான்றிதழ் (திருமணமான பெண் மாணவர்கள் மட்டும்)
விண்ணப்பக் கட்டணமாக ரூபா 1000.00 இனை 890102080000067 என்ற மக்கள் வங்கிக் கணக்கிலக்கத்தில் செலுத்தி பெறப்பட்ட பற்றுச்சீட்டினை பதிவேற்றப்படல் வேண்டும். கீழ் காட்டப்பட்டுள்ள கொடுப்பனவுச்சீட்டின் மாதிரியை பயன்படுத்தவும்:
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தினை தரவிறக்கம் செய்து அதனுடன் கொடுப்பனவுச் சீட்டின் மூலப்பிரதி மற்றும் பதிவேற்றப்பட்ட ஆவணங்களின் பிரதிகளையும் 08/05/2026 அல்லது அதற்கு முன்னர் அனுப்பிவைக்கவும்.
தபாலுறையின் இடதுபக்க மேல் மூலையில் ‘வணிகமாணி சிறப்புப் பட்டப்படிப்பு – Batch X (2024/2025)’ என தெளிவாகக் குறிப்பிடப்படல் வேண்டும்.
பிரதிப் பதிவாளர்,
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
கற்கைநெறி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை வழங்கும் நமது whatsappகுழுவில் இணைய – ceylonvacancy.com/wg
Join Hereமேலதிக அறிவித்தல்கள்: https://codl.jfn.ac.lk