Bachelor of Business Management (BBM) 2021-TAMIL AD

Bachelor of Business Management (BBM) 2021

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
வியாபார முகாமைத்துவ இளமாணிப்பட்டம்
வெளிவாரிப்பட்டப்படிப்பு – 2021

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தினால் நடாத்தப்படவுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெறப்பட்ட மேற்படி கற்கை நெறியின் 2021ம் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன

அனுமதிக்கான தகைமைகள் :

  1. க.பொ.த (உ/த) வர்த்தகத்துறையில் சித்திபெற்றிருப்பதுடன் இலங்கையிலுள்ள பல்கலைக்கழக முறைமையில் அனுமதி பெறுவதற்கான தகைமையைப் பெற்றிருத்தல்*.
  2. க.பொ.த (உ/த) ஏதேனும் துறையில் சித்தி பெற்றிருப்பதுடன் இலங்கையிலுள்ள பல்கலைக்கழக முறைமையில் அனுமதி பெறுவதற்கான தகைமையைப் பெற்றிருத்தல்*.
  3. இதனுடன் தொடர்புபட்ட ஒரு தொழில்சார் தகைமையைப் பெற்றிருத்தல்**
  4. கிழக்குப் பல்கலைக்கழக மூதவையினால் அங்கீகரிக்கப்படக் கூடிய ஏதேனும் கல்விசார்/ தொழில்சார்/ தொழிற் பயிற்சிசார் தகைமையினைப் பெற்றிருத்தல்.

*குறிப்பு

  • – க.பொ.த (உ/த) பரீட்சைக்கு 2019ம் வருடம் அல்லது அதற்கு முந்திய வருடங்களில் தோற்றிய மாணவர்கள்.
  • – இலங்கை பல்கலைக்கழக முறைமையில் அனுமதி பெறுவதற்கு தகுதியான அதிகூடிய தகைமைகள்.:
    1. அனுமதிக்கப்பட்ட 03 பாடங்களிலும் கூடியது 03 அமர்வுகளுக்கு மேற்படாமல் ஒரே அமர்வில் அனைத்துப் பாடங்களிலும் ‘S’ தரச் சித்தியைப் பெற்றிருத்தல்.
    2. பொதுச் சாதாரணப் பரீட்சையில் (Common General Test) குறைந்தது 30% புள்ளிகளைப் பெற்றிருத்தல்.

** மேலதிக தகவல்களை http://www.cedec.esn.ac.lk/bbm என்னும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

தெரிவு நடைமுறைகள்:

அனுமதிக்கான தகைமைகளில் முதல் பிரிவிலுள்ளவர்களுக்கு (பிரிவு (a)) முன்னுரிமை வழங்கப்படும்.

பாடநெறிக்கான காலம் :03 வருடங்கள்
மொழி மூலம் :  தமிழ்
பாடநெறிக்கான கட்டணம் :    
ரூ. 110,000.00
03 தவணைகளில் செலுத்தமுடியும்
(முறையே ரூ. 55,000.00, ரூ. 35,000.00, ரூ. 20,000.00).

விண்ணப்ப நடைமுறைகள்:  

விண்ணப்பப்படிவத்தினையும் ஏனைய தகவல்களையும் விண்ணப்பதாரிகள் http://www.cedec.esn.ac.lk/bbm எனும் இணையத்தளத்தில் மூலம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பதாரிகள் இணையத்தளத்தினூடாகவும் விண்ணப்பித்தல் கட்டாயமாகும்.

முடிவுத்திகதி :   24 th November 2021

மேலதிக விபரங்கள் :

உதவிப் பதிவாளர்
வெளிவாரிப் பட்டங்கள் மற்றும் விரிவாக்கல் கற்கைகள் நிலையம்,
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
வந்தாறுமூலை,
செங்கலடி.

தொ.இல: 065-2240972
மின்னஞ்சல்: arcedec@esn.ac.lk
இணையம்: http://www.cedec.esn.ac.lk/bbm