SLACS Limited Exam 2021

இலங்கை கணக்காளர் சேவையின் தரம் 3 மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை 2021 கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஆன்லைன் முறை விண்ணப்பங்கள் மூலமாகவே குறித்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும்..

ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த பின்னர் அதனை டவுண்லோட் செய்து பின்னர் அச்சுப் பிரதி செய்து உங்கள் கையொப்பத்தை அதில் உறுதிப்படுத்தி விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி தினத்திற்கு முன்னர் பரீட்சை ஆணையாளர் நாயகம் நிறுவனம் சார் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் தமிழகம் 1503 கொழும்பு எனும் முகவரிக்கு கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வைக்கவும்.

ஆட்சேர்ப்புக்கான தகைமைகள்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு தகவலுடன் விண்ணப்பங்கள் கோரப்படும் அறிவித்தல் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் தினத்தன்று அரசாங்க அல்லது மாகாண சேவையில் ஐந்து வருடங்களுக்கு குறையாத திருப்திகரமான தொடர்ச்சியான நிரந்தர சேவை காலத்துடன் உரிய தினத்தன்று குறைந்தபட்சம் ஐந்து சம்பள ஏற்றங்களை பெற்று இருத்தல்.

இது தொடர்பான முழுமையான வர்த்தமானி அறிவித்தலை வாசிக்க கீழே கிளிக் செய்யவும்.

ஆன்லைன் மூலமான விண்ணப்பம் வெளியாவதற்கு சில தினங்கள் தாமதம் ஆகலாம்..கீழே உள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைன் விண்ணப்பத்துக்கு பிரவேசிக்க முடியும்.