Office for National Unity and Reconciliation Vacancies 2026

Office for National Unity and Reconciliation Vacancies 2026

APPLICATION FORM(MA)DOWNLOAD
APPLICATION FORM(OFFICE ASSISTANT)DOWNLOAD
APPLICATION FORM(ADMIN OFFICER)DOWNLOAD
APPLICATION FORM(DO)DOWNLOAD
JOIN WHATSAPP GROUPJOIN

நீதி அமைச்சின் கீழ் 2024 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தில் (Office for National Unity and Reconciliation – ONUR) நிலவும் பின்வரும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகைமையுடைய இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

📌 சுருக்கமான வேலைவாய்ப்பு விபரங்கள்

விபரம் தகவல்
நிறுவனம் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் (ONUR)
அமைச்சு நீதி அமைச்சு (Ministry of Justice)
மொத்த வெற்றிடங்கள் 30 பதவிகள்
சம்பள சுற்றுநிருபம் 2025.03.25 ஆம் திகதிய முகாமைத்துவ சேவைகள் சுற்றுநிருப இலக்கம் 01/2025

📋 பதவிகள் மற்றும் வெற்றிடங்களின் விபரம்

  • நிர்வாக உத்தியோகத்தர் (Administrative Officer) – 01 வெற்றிடம்
  • அபிவிருத்தி உத்தியோகத்தர் (Development Officer) – 16 வெற்றிடங்கள்
  • முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant) – 10 வெற்றிடங்கள்
  • அலுவலக உதவியாளர் (Office Assistant) – 03 வெற்றிடங்கள்

1. நிர்வாக உத்தியோகத்தர் (Administrative Officer)

  • பதவிகளின் எண்ணிக்கை: 01
  • சேவைப் பிரிவு: JM 1-1
  • வயதெல்லை: 22 வயதுக்கு குறையாதவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
  • சம்பள அளவுத்திட்டம்: JM 1-1 – 2025: ரூ. (72,650 – 10 x 1,360 – 18 x 2,040 – 122,970)

கல்வித் தகைமைகள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட பின்வரும் ஏதேனும் ஒரு பாடத்துறையில் பட்டமொன்றைப் பெற்றிருத்தல் வேண்டும்:

  • மனிதவள முகாமைத்துவம்
  • பொது நிர்வாகம்
  • வியாபார நிர்வாகம்
  • அல்லது இப்பதவியுடன் தொடர்புடைய பாடத்துறையில் பெறப்பட்ட பட்டம்.

பதவியின் தன்மை மற்றும் கடமைகள்

  • நிறுவனத்தின் நிர்வாக நடவடிக்கைகளை ஒழுங்கமைத்தல், மேற்பார்வை செய்தல் மற்றும் ஊழியர்களின் ஒழுக்கக் கட்டுப்பாடு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறைவேற்றுதல்.
  • நிறுவனத்தின் அனைத்து உத்தியோகத்தர்களினதும் விடுமுறை தொடர்பான பணிகளை மேற்பார்வை செய்தல்.
  • நிறுவன ஊழியர்களின் நலன்புரி வசதிகள், பணிக்கொடை, படிகள், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஏனைய நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்குதல்.
  • கடமைப் பணிகளுக்காக வாகனங்களை ஒதுக்குதல் மற்றும் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோக நடவடிக்கைகள்.
  • பிரிவின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள், புதிய நிர்வாக முறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் அது தொடர்பில் உயர்மட்ட முகாமைத்துவத்திற்கு முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தல்.
  • நிறுவனத்தின் மனிதவள அபிவிருத்தி தொடர்பான பணிகளைச் செய்தல், மேம்படுத்துதல் மற்றும் கொள்கைகளை வகுப்பதற்கு ஒத்துழைத்தல்.
  • நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகச் செயற்படுதல்.
  • பணிப்பாளர் நாயகத்தினால் ஒப்படைக்கப்படும் ஏனைய கடமைகளை நிறைவேற்றுதல்.

2. அபிவிருத்தி உத்தியோகத்தர் (Development Officer)

  • பதவிகளின் எண்ணிக்கை: 16
  • சேவைப் பிரிவு: MA 3
  • வயதெல்லை: 22 வயதுக்கு குறையாதவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
  • சம்பள அளவுத்திட்டம்: MA 3 – 2025: ரூ. (53,940 – 10 x 800 – 11 x 1,190 – 10 x 1,320 – 5 x 1,350 – 94,980)

கல்வித் தகைமைகள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பின்வரும் ஏதேனும் ஒரு பாடத்துறையில் பட்டமொன்றைப் பெற்றிருத்தல்:

  • பொது நிர்வாகம் / சமாதானம் மற்றும் முரண்பாட்டுத் தீர்வு / மனித வள முகாமைத்துவம் / சட்டம் / சமூகவியல் / வியாபார நிர்வாகம் / தகவல் தொழில்நுட்பம் / வணிகம் / நிதி முகாமைத்துவம் / வியாபார முகாமைத்துவம் / சர்வதேச உறவுகள் அல்லது பதவிக்குரிய விடயத்துறையில் பெறப்பட்ட பட்டம்.

பதவியின் தன்மை மற்றும் கடமைகள்

  • நிறுவனத்தின் நிர்வாக நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கும் போது நிர்வாக அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
  • சகல உத்தியோகத்தர்களினதும் விடுமுறை தொடர்பான பணிகளை மேற்கொள்ளல்.
  • பணியாளர்களின் நலனோம்புகை வசதிகள், பணிக்கொடை, கொடுப்பனவுகள், ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளல்.
  • நிகழ்ச்சித்திட்டப் பிரிவின் அதிகாரிகள் ஒப்படைக்கும் கடமைகளை நிறைவேற்றுதல்.
  • பிரிவின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் புதிய நிர்வாக முறைமைகளை உயர்மட்ட முகாமைத்துவத்திற்கு சமர்ப்பித்தல்.
  • நிகழ்ச்சிகளுக்குரிய அனைத்து முற்பணங்களைப் பெறுதல், மீளளிப்புச் செய்தல், கொடுப்பனவுகள் தொடர்பான உறுதிச்சீட்டுகளை (வவுச்சர்கள்) தயாரித்தல் மற்றும் கணக்குப் பிரிவிடம் கையளித்தல்.
  • மாவட்ட மற்றும் பிரதேச அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்புச் செய்து திட்டங்களை அடிமட்டத்தில் நடைமுறைப்படுத்த உதவுதல்.
  • கணக்காய்வுக் கேள்விகளுக்குரிய தகவல்களைத் திரட்டுதல், அறிக்கைகளை ஒருங்கிணைத்து கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • பணிப்பாளர் நாயகத்தினால் ஒப்படைக்கப்படும் ஏனைய கடமைகளை நிறைவேற்றுதல்.

3. முகாமைத்துவ உதவியாளர் (Management Assistant)

  • பதவிகளின் எண்ணிக்கை: 10
  • சேவைப் பிரிவு: MA 1-1
  • வயதெல்லை: 18 வயதுக்கு குறையாதவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
  • சம்பள அளவுத்திட்டம்: MA 1-1 – 2025: ரூ. (46,220 – 10 x 540 – 7 x 630 – 4 x 890 – 20 x 1,190 – 83,390)

கல்வி மற்றும் தொழில்முறைத் தகைமைகள்

  • க.பொ.த (சாதாரண தர) பரீட்சை:
    • சிங்களம் அல்லது தமிழ்
    • கணிதம்
    • ஆங்கில மொழி
    ஆகிய பாடங்கள் உட்பட நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்திகளுடன் (Credit Passes) ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
  • க.பொ.த (உயர்தர) பரீட்சை: குறைந்தபட்சம் மூன்று (03) பாடங்களில் (சாதாரண பொதுப் பரீட்சை தவிர) சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
  • கணினித் தகைமை: கணினிப் பிரயோகப் பயன்பாடு தொடர்பில் மூன்று (03) மாதங்களுக்குக் குறையாத பாடநெறியொன்றைப் பயின்று சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

பதவியின் தன்மை மற்றும் கடமைகள்

  • ஆவண முகாமைத்துவம் மற்றும் ஆவணக்காப்பக நடவடிக்கைகளுக்கு உதவுதல்.
  • சாதாரண நிர்வாக மற்றும் அலுவலக நடவடிக்கைகளுக்கு உதவுதல்.
  • பணியாட்டொகுதி மற்றும் மனித வள நடவடிக்கைகளுக்கு உதவுதல்.
  • நிதி, உள்ளகக் கணக்காய்வு மற்றும் கணக்கீட்டு நடவடிக்கைகளுக்கு உதவுதல்.
  • தரவு முறைமைகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் முன்னேற்ற மீளாய்வு நடவடிக்கைகளுக்கு உதவுதல்.
  • பொருட்கட்டுப்பாடு மற்றும் களஞ்சிய முகாமைத்துவத்திற்கு உதவுதல்.
  • உயர்மட்ட மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களால் ஒப்படைக்கப்படும் ஏனைய கடமைகள்.

4. அலுவலக உதவியாளர் (Office Assistant)

  • பதவிகளின் எண்ணிக்கை: 03
  • சேவைப் பிரிவு: PL 1
  • வயதெல்லை: 18 வயதுக்கு குறையாதவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
  • சம்பள அளவுத்திட்டம்: PL 1 – 2025: ரூ. (40,500 – 10 x 450 – 10 x 490 – 7 x 540 – 15 x 590 – 62,530)

கல்வித் தகைமைகள்

  • கல்விப் பொதுத் தராதரச் சாதாரண தரப் (G.C.E. O/L) பரீட்சைக்குத் தோற்றியிருத்தல் போதுமானது.

பதவியின் தன்மை மற்றும் கடமைகள்

  • அலுவலகத்தின் உள்ளக மற்றும் வெளியாக வளாகத்தைச் சுத்தமாகவும் சுகாதாரமான முறையிலும் பேணிப் பாதுகாத்தல்.
  • நிறுவனத்தின் திறவுகோல் சேவை மற்றும் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிரிவுகளைத் திறத்தல் / மூடுதல் தொடர்பான பணிகளை மேற்கொள்ளல்.
  • பிரிவுகளுக்கு இடையில் கடிதங்கள், கோப்புகள், புத்தகங்கள் கொண்டு செல்லுதல் மற்றும் களஞ்சியப் பொருட்களைக் கொண்டுவருதல்.
  • தபால் தொடர்பான பணிகளை நிறைவேற்றுதல்.
  • பணியாட்டொகுதியினருக்கு அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளின்போது ஒத்துழைப்பு வழங்குதல்.
  • பணிப்பாளர் நாயகத்தினால் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகளினால் ஒப்படைக்கப்படும் ஏனைய கடமைகளை நிறைவேற்றுதல்.

⚠️ விண்ணப்பதாரர்களுக்கான முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகள், வயதெல்லை மற்றும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். சம்பள கொடுப்பனவுகள் மற்றும் படிநிலைகள் அனைத்தும் 2025.03.25 ஆம் திகதிய முகாமைத்துவ சேவைகள் சுற்றுநிருப இலக்கம் 01/2025 இற்கு அமைய வழங்கப்படும்.

1 Trackback / Pingback

  1. Development Officer,Management Assistan,Office Assistant&MORE-Office for National Unity and Reconciliation Vacancies 2026 - Ceylon Vacancy

Comments are closed.