Registrar General’s Department invites applications for 13 Office Employees Service (Class III) vacancies. O/L qualified candidates can apply before 20 Nov 2026.
பதிவாளர் நாயகம் திணைக்களம் வேலைவாய்ப்பு 2026 – காரியாலயப் பணியாளர் சேவை (Office Employee Service Grade III) | கடைசித் திகதி: 2026.11.20
இலங்கை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இயங்கும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் (Registrar General’s Department) ஒருங்கிணைந்த சேவையின் காரியாலயப் பணியாளர் சேவை தரம் III (Office Employees Service Class III – அலுவலக உதவியாளர்) பிரிவில் நிலவும் 13 வெற்றிடங்களை நிரப்புவதற்காக இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன (வர்த்தமானி திகதி: 30.10.2026).
📋 விரைவுச் சுருக்கம் (Quick Job Summary)
| அமைச்சு | பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு |
| திணைக்களம் | பதிவாளர் நாயகம் திணைக்களம் (Registrar General’s Department) |
| பதவியின் பெயர் | காரியாலயப் பணியாளர் சேவை – தரம் III (Office Assistant / Karyala Sewaka) |
| மொத்த வெற்றிடங்கள் | 13 வெற்றிடங்கள் |
| அடிப்படைத் தகைமை | க.பொ.த (சா/த) 6 பாடங்களில் சித்தி (2 திறமைச் சித்திகளுடன்) |
| வயது எல்லை | 18 – 45 வயதிற்குள் (2026.11.20 அன்று) |
| மாதாந்த சம்பள அளவுத்திட்டம் | ரூபா 40,000 – 61,880/= (PL-1-2025) |
| விண்ணப்பிக்கும் முறை | பதிவுத் தபால் மூலம் (Registered Post) |
| விண்ணப்பிக்க இறுதித் திகதி | 2026 நவம்பர் 20 |
📍 வெற்றிடங்கள் நிலவும் அலுவலகங்கள் விபரம்
இவ்வெற்றிடங்கள் அனைத்தும் பின்வரும் காணிப் பதிவக மற்றும் ஆவணக் காப்பக அலுவலகங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன:
| பிராந்திய அலுவலகம் (Regional Office) | பதவி | வெற்றிடங்கள் |
|---|---|---|
| யாழ்ப்பாணம் காணிப் பதிவக அலுவலகம் (Jaffna Land Registry) | காரியாலயப் பணியாளர் (தரம் III) | 04 |
| கிளிநொச்சி காணிப் பதிவக அலுவலகம் (Kilinochchi Land Registry) | காரியாலயப் பணியாளர் (தரம் III) | 02 |
| முல்லைத்தீவு காணிப் பதிவக அலுவலகம் (Mullaitivu Land Registry) | காரியாலயப் பணியாளர் (தரம் III) | 03 |
| வவுனியா காணிப் பதிவக அலுவலகம் (Vavuniya Land Registry) | காரியாலயப் பணியாளர் (தரம் III) | 01 |
| மன்னார் காணிப் பதிவக அலுவலகம் (Mannar Land Registry) | காரியாலயப் பணியாளர் (தரம் III) | 01 |
| ஆவணக் காப்பகம் – வவுனியா (Record Room Vavuniya) | காரியாலயப் பணியாளர் (தரம் III) | 02 |
| மொத்த வெற்றிடங்கள்: | 13 | |
🎓 தகைமைகள் (Eligibility Criteria)
1. கல்வித் தகைமை:
- கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (G.C.E. O/L) பரீட்சையில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாத அமர்வுகளில் குறைந்தபட்சம் இரண்டு (02) திறமைச் சித்திகள் (Credit Passes) உட்பட ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
2. வயது எல்லை:
- விண்ணப்ப முடிவுத் திகதியான 2026 நவம்பர் 20 அன்று விண்ணப்பதாரருக்கு 18 வயதுக்கு குறையாமலும் 45 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
- குறிப்பு: ஏற்கனவே அரச சேவையில் நிரந்தர மற்றும் ஓய்வூதிய உரிமையுடைய பதவிகளில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு இந்த உச்ச வயது வரம்பு (45 வயது) பொருந்தாது.
3. ஏனைய தகைமைகள்:
- இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும்.
- சிறந்த நற்பண்பு மற்றும் உடல், உள ஆரோக்கியம் உடையவராக இருத்தல் வேண்டும்.
- நாட்டின் எந்தவொரு பகுதியிலும் சேவையாற்றத் தயாராக இருத்தல் வேண்டும்.
💼 சம்பளம் மற்றும் சேவை நிபந்தனைகள்
- பதவியின் தன்மை: நிரந்தரமானது மற்றும் ஓய்வூதிய உரித்துடையது (Widows’ and Orphans’ Pension Scheme – W&OP பங்களிப்பு செலுத்தப்பட வேண்டும்).
- பயிற்சிக் காலம் / நன்னடத்தைக் காலம் (Probation): நியமனம் பெற்ற திகதியிலிருந்து 03 வருடங்கள் ஆகும்.
- சேவை நிபந்தனை: நியமனம் பெறும் முதலாவது சேவை நிலையத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் கட்டாயமாக சேவையாற்ற வேண்டும்.
- சம்பள அளவுத்திட்டம் (Salary Scale):
சம்பளக் குறியீடு: PL-1-2025
மாதாந்த சம்பளம்: ரூபா 40,000 – 10 x 450 – 10 x 490 – 10 x 540 – 12 x 590 – ரூபா 61,880/= (அரச நிருவாக சுற்றறிக்கை 10/2025 இன் படி 2027.01.01 முதல் அமுல்படுத்தப்படும்).
📊 தெரிவு செய்யப்படும் முறை மற்றும் புள்ளிகள் விபரம்
தகைமையுடைய விண்ணப்பதாரர்கள் வடிவமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சைக்கு (Structured Interview) அழைக்கப்படுவர். நேர்முகப் பரீட்சை மூலம் பெறப்படும் புள்ளிகளின் அடிப்படையில் திறமை வரிசைப்படி நியமனங்கள் வழங்கப்படும். மொத்தம் 50 புள்ளிகள் வழங்கப்படும்:
| மதிப்பீட்டு அளவுகோல் | அதிகபட்ச புள்ளி |
|---|---|
|
கல்வித் தகைமை: • க.பொ.த (உ/த) சித்திக்கு – 05 புள்ளிகள் • க.பொ.த (சா/த) கணிதம், தாய்மொழி, இரண்டாவது அரச கரும மொழி, ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் சித்திக்கு (ஒரு மொழிக்கு 2 புள்ளிகள் வீதம் அதிகபட்சம் 5 பாடங்கள்) – 10 புள்ளிகள் |
15 புள்ளிகள் |
| தொழில்சார் தகைமைகள் மற்றும் அனுபவம் | 10 புள்ளிகள் |
| புறக்கிருத்திய செயற்பாடுகள் (விளையாட்டு / சமூக சேவை போன்றவை) | 10 புள்ளிகள் |
| ஆளுமை மற்றும் தொடர்பாடல் திறன் (Personality & Communication) | 10 புள்ளிகள் |
| நேர்முகப் பரீட்சையின் போது வெளிப்படுத்தப்படும் விசேட திறமைகள் | 05 புள்ளிகள் |
| மொத்தப் புள்ளிகள்: | 50 புள்ளிகள் |
📮 எவ்வாறு விண்ணப்பிப்பது? (How to Apply)
- வர்த்தமானியில் வழங்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தை (A4 தாளில்) சுயவிபரங்களுடன் தெளிவாகத் தயாரித்துக் கொள்ளவும்.
- விண்ணப்பப் படிவத்துடன் பின்வரும் ஆவணங்களின் சான்றொப்பமிடப்பட்ட பிரதிகளை (Certified Copies) இணைக்க வேண்டும்:
- பிறப்புச் சான்றிதழ் பிரதி
- தேசிய அடையாள அட்டை (NIC) அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டுப் பிரதி
- கல்விச் சான்றிதழ்களின் பிரதிகள் (O/L, A/L)
- கிராம அலுவலர் சான்றிதழ் (DS 04 படிவம்)
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பக் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “කාර්යාල සේවක සේවයේ III ශ්රේණිය සඳහා වන සම්මුඛ පරීක්ෂණයට සහභாගිවීමේ අයදුම්පත” (காரியாலயப் பணியாளர் சேவை தரம் III க்கான நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பம்) எனக் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
- விண்ணப்பங்களை 2026 நவம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் அல்லது அன்றைய தினத்தில் கிடைக்குமாறு பதிவுத் தபாலில் (Registered Post) அனுப்ப வேண்டும்.
📫 விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
ரெஜிஸ்டிரார் ஜெனரல் (Registrar General),
பதிவாளர் நாயகம் திணைக்களம் (Registrar General’s Department),
இல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை,
பத்தரமுல்ல (Battaramulla).
📥 உத்தியோகபூர்வ வர்த்தமானி & விண்ணப்பப் படிவம்
இன்னும் தமிழ் விண்ணப்பம் வெளியாகவில்லை ..வெளியானதும் குழுவில் பகிரப்படும்
📢 தகுதியுடைய உங்கள் நண்பர்களுக்கும் இந்த அரச வேலைவாய்ப்புத் தகவலை உடனே WhatsApp மூலம் பகிருங்கள்!