DTET Field Assistant Vacancies 2026 – 99 Technical College Jobs

Apply for 99 Field Assistant (Labourer) vacancies at the Department of Technical Education & Training (DTET). Check salary, qualifications & apply by 30.10.2026

இலங்கை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தொழினுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தினால் (DTET) நடாத்தப்படும் தொழினுட்ப மற்றும் தொழிற் கல்லூரிகளில் நிலவும் 99 கள உதவியாளர் (தொழிலாளி) – Field Assistant (Labourer) வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியான இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இப்பதவிக்கான கல்வித் தகைமைகள், வயது எல்லை, சம்பள விபரம் மற்றும் விண்ணப்பிக்கும் முழுமையான வழிகாட்டல் கீழே விரிவாகத் தரப்பட்டுள்ளது.

📌 முக்கிய விபரங்கள் சுருக்கமாக (Job Overview)

நிறுவனம் / திணைக்களம் தொழினுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் (DTET)
பதவியின் பெயர் கள உதவியாளர் (தொழிலாளி) – தரம் III
மொத்த வெற்றிடங்கள் 99
கல்வித் தகைமை க.பொ.த. சாதாரண தரத்தில் 2 Credit உட்பட 6 பாடச் சித்திகள்
வயது எல்லை 18 – 45 வயது
விண்ணப்பிக்கும் முறை பதிவுத் தபால் மூலம்
விண்ணப்ப முடிவுத் திகதி 2026 ஒக்டோபர் 30

தொழினுட்ப / தொழிற் கல்லூரி வாரியான வெற்றிட விபரம்

இலங்கை முழுவதிலும் உள்ள 25 அரச தொழினுட்ப மற்றும் தொழிற் கல்லூரிகளில் கீழ்வருமாறு 99 வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

தொழினுட்ப / தொழிற் கல்லூரி வெற்றிடங்கள்
அநுராதபுரம் தொழினுட்பக் கல்லூரி4
பதுளை தொழினுட்பக் கல்லூரி4
யாழ்ப்பாணம் தொழினுட்பக் கல்லூரி2
கண்டி தொழினுட்பக் கல்லூரி4
குருநாகல் தொழினுட்பக் கல்லூரி8
மருதானை தொழினுட்பக் கல்லூரி4
இரத்தினபுரி தொழினுட்பக் கல்லூரி4
ஆனமடுவ தொழிற் கல்லூரி4
பண்டாரவளை தொழிற் கல்லூரி5
தம்புள்ளை தொழிற் கல்லூரி8
தெஹியத்தகண்டிய தொழிற் கல்லூரி8
கம்பஹா தொழிற் கல்லூரி5
ஹசலக்க தொழிற் கல்லூரி5
ஹோமாகம தொழிற் கல்லூரி2
கேகாலை தொழிற் கல்லூரி4
மன்னார் தொழிற் கல்லூரி2
மாத்தளை தொழிற் கல்லூரி2
மொணராகலை தொழிற் கல்லூரி5
நுவரெலியா தொழிற் கல்லூரி3
இரத்மலானை தொழிற் கல்லூரி2
திருகோணமலை தொழிற் கல்லூரி2
வவுனியா தொழிற் கல்லூரி5
வரக்காப்பொல தொழிற் கல்லூரி3
வாரியப்பொல தொழிற் கல்லூரி2
வீரவில தொழிற் கல்லூரி2
மொத்த வெற்றிடங்கள் 99

விண்ணப்பிப்பதற்கான தகைமைகள் (Eligibility Criteria)

  • கல்வித் தகைமை: க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் (G.C.E. O/L) ஆகக்கூடியது இரண்டு அமர்வுகளில் (02 sittings) குறைந்தது இரண்டு (02) திறமைச் சித்திகள் (Credit Passes) உட்பட ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
  • தொழில்சார் தகைமை: பதவிக்குரிய கடமைகளுடன் தொடர்புடைய தொழில்சார் தகைமைகள் மற்றும் பயிற்சிகள் மேலதிக அனுகூலமாகக் கருதப்படும்.
  • அனுபவம்: உரிய கடமைகள் தொடர்பான முன் அனுபவங்கள் பரிசீலிக்கப்பட்டு புள்ளிகள் வழங்கப்படும்.
  • வயது எல்லை: விண்ணப்ப முடிவுத் திகதியான 2026.10.30 அன்று 18 வயதுக்குக் குறையாதவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
  • உடற்தகுதி: நாட்டின் எந்தப் பகுதியிலும் கடமையாற்றக்கூடிய சிறந்த உடல் மற்றும் உள ஆரோக்கியத்தைக் கொண்டிருத்தல் அவசியம்.

பதவியின் முக்கிய கடமைகள் (Job Role)

  1. கல்லூரி வளாகத்தின் பராமரிப்புப் பணிகள் மற்றும் நிறுவனத் தேவைகளுக்குரிய சேவைகளை வழங்குதல்.
  2. கல்லூரிக்குச் சொந்தமான பண்ணைகளின் விவசாய மற்றும் தொழிலாளர் கடமைகளை முறையாகப் பேணுதல்.
  3. நிறுவனத் தலைவரால் பதவிக்குரியவாறு வழங்கப்படும் ஏனைய களப் பணிகளை முன்னெடுத்தல்.

சம்பளம் மற்றும் சேவை நிபந்தனைகள்

  • சம்பள அளவுத்திட்டம்: 2025.03.25 திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை 10/2025 இற்கு அமைய PL1-2025 சம்பள அளவீட்டின்படி ரூ. 40,000 – 450 × 10 – 490 × 10 – 540 × 10 – 590 × 12 – ரூ. 61,880/- வழங்கப்படும்.
  • ஓய்வூதியம்: இப்பதவி நிரந்தரமானது மற்றும் ஓய்வூதிய உரிமை கொண்டது. W&OP திட்டத்திற்குப் பங்களிக்க வேண்டும்.
  • நன்னடத்தைக் காலம்: மூன்று வருட நன்னடத்தைக் காலத்திற்குட்பட்டதுடன், மூன்று வருடங்களுக்குள் முதலாம் வினைத்திறன்காண் தடைத்தாண்டல் (1st Efficiency Bar) பரீட்சையில் தேர்ச்சி பெற வேண்டும்.

தெரிவு முறை மற்றும் நேர்முகப் பரீட்சை புள்ளித் திட்டம்

எழுத்துப் பரீட்சை எதுவும் இடம்பெறாது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை (Structured Interview) நடாத்தப்பட்டு, அதிக புள்ளிகளைப் பெறும் அடிப்படையில் வெற்றிடங்கள் நிரப்பப்படும்.

மதிப்பீட்டு விபரம் அதிகபட்ச புள்ளி
மேலதிக கல்வித் தகைமைகள்20
தொழில்சார் தகைமைகள்20
பதவிக்குரிய வேலை அனுபவம்40
இணைப்பாடவிதான செயற்பாடுகள்15
நேர்முகப் பரீட்சையில் வெளிப்படுத்தும் ஆளுமை05
மொத்தப் புள்ளிகள் 100

விண்ணப்பிக்கும் முறை (How to Apply)

  1. வர்த்தமானிப் பத்திரிகையில் தரப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கு அமைய A4 அளவுத் தாளில் விண்ணப்பத்தைச் சுயமாகத் தயார் செய்து கொள்ளவும்.
  2. விண்ணப்பப் படிவத்தில் அனைத்து விபரங்களையும் தெளிவாக நிரப்பி, உங்களது கையொப்பத்தை அரச அதிபர், சமாதான நீதவான், சட்டத்தரணி அல்லது அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவரிடம் அத்தாட்சிப்படுத்த (Attestation) வேண்டும்.
  3. விண்ணப்பம் இடப்படும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் “ක්ෂේත්‍ර සහායක (කම්කරු) තනතුරට බඳවා ගැනීම / கள உதவியாளர் (தொழிலாளி) பதவிக்கு ஆட்சேர்ப்பு” எனத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
  4. ஏற்கனவே அரச அல்லது மாகாண அரச சேவையில் உள்ளவர்கள் தமது திணைக்களத் தலைவர் ஊடாக விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
📮 விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய முகவரி:

பணிப்பாளர் நாயகம்,
தொழினுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம்,
த.பெ. இல. 557,
ஓல்கொட் மாவத்தை,
கொழும்பு 10.

📄 தமிழ் விண்ணப்பப் படிவம் மற்றும் வர்த்தமானி

கள உதவியாளர் (தொழிலாளி) – தரம் III பதவிக்கான தமிழ் விண்ணப்பப் படிவம் மற்றும் தமிழ் வர்த்தமானியை கீழே உள்ள இணைப்புகள் மூலம் பார்வையிடலாம்.

📥 தமிழ் விண்ணப்பப் படிவம் – DOWNLOAD 📘 தமிழ் வர்த்தமானி – VIEW / DOWNLOAD

வர்த்தமானி திகதி: 02.10.2026
விண்ணப்ப முடிவுத் திகதி: 30.10.2026

விண்ணப்பத்தை அனுப்புவதற்கு முன் அதிகாரபூர்வ அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் சரிபார்க்கவும்.

1 Trackback / Pingback

  1. DTET Recruitment 2026: 99 Field Assistants (O/L Qualified) - Ceylon Vacancy

Comments are closed.