நீதிமன்ற எழுதுவினைஞர் தரம் III
(Judicial Clerk Grade III)
நீதிச் சேவை ஆணைக்குழு (JSC) – 2026
இந்த வர்த்தமானி அறிவித்தலானது நீதிச் சேவை ஆணைக்குழுவினால் (JSC) வெளியிடப்பட்ட, நீதிமன்ற எழுதுவினைஞர் தரம் III பதவிக்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2026 பற்றிய முழுமையான விபரங்களை வழங்குகிறது.
*. இது அரச ஓய்வூதியத் திட்டத்திற்கு உட்பட்டது.
- க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் ஒரே அமர்வில் சிங்களம்/தமிழ் மொழி மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்திகளுடன் (Credit passes), குறைந்தபட்சம் 04 திறமைச் சித்திகளையும் ஆங்கில மொழி(S) உட்பட மொத்தம் 06 பாடங்களில் சித்தியையும் பெற்றிருத்தல் வேண்டும்.
- க.பொ.த (உயர்தரம்): ஒரே அமர்வில் 03 பாடங்களில் சித்தி (பொதுச் சாதாரண பரீட்சை மற்றும் ஆங்கிலம் தவிர்ந்த).
இரண்டு வினாத்தாள்கள் (தமிழ் அல்லது சிங்களத்தில் எழுதலாம்):
- மொழித் திறன் (100 புள்ளிகள்): கருத்து வெளிப்பாடு,, கட்டுரை மற்றும் கடிதம்.
- நுண்ணறிவு (100 புள்ளிகள்): கணித அறிவு மற்றும் தர்க்கரீதியான சிந்தனை.
*சித்தியடைய ஒவ்வொரு பாடத்திலும் 40% புள்ளிகள் அவசியம்.
*வங்கிப் பற்றுச்சீட்டை (Receipt) விண்ணப்பப் படிவத்தில் ஒட்ட வேண்டும்.
விண்ணப்பத்தை A4 தாளில் மாதிரிப்படிவத்தின் படி தயாரித்து, “Judicial Clerk Grade III Open Competitive Exam – 2026” என உறையின் மேல் குறிப்பிட்டு கீழ்கண்ட முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பவும்.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய வங்கி பற்றுச்சீட்டு மற்றும் கடித உறையின் மாதிரி வடிவத்தை (Payment Slip & Envelope Format) கீழே உள்ள இணைப்பை அழுத்திப் பெற்றுக்கொள்ளலாம்:
மாதிரிப் படிவங்களைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்