National Agri market services limited vacancies

National Agri market services limited vacancies

APPLICATION FORMDOWNLOAD

வரையறுக்கப்பட்ட தேசிய விவசாய சந்தை சேவைகள் நிறுவனம்

NATIONAL AGRI MARKET SERVICES LIMITED

வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026

அமைச்சு:
வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு

நிறுவனம்:
வரையறுக்கப்பட்ட தேசிய விவசாய சந்தை சேவைகள் நிறுவனம் (NATIONAL AGRI MARKET SERVICES LIMITED)

இந்நிறுவனம் முழுமையாக அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனமாகும். இது நாடு முழுவதிலுமுள்ள விசேட பொருளாதார நிலையங்களை (DECs) நிர்வகிக்கிறது.

1. முகாமைத்துவ தரம் – MM 1-1

சம்பள அளவு:
ரூபா 91,690 – 10 x 2,480 – 15 x 3,450 – 168,240

வாழ்வுச்செலவுப் படி: ரூபா 17,800.00

தொழில்சார் கொடுப்பனவு: ரூபா 25,000.00

தொலைபேசிக் கொடுப்பனவு: 02/2022 PED சுற்றறிக்கையின் பிரகாரம்

வயதெல்லை: விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி நாளன்று 22 வயதிற்குக் குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

தெரிவு செய்யும் முறை: மொழித் திறன் / ஆற்றல் குறித்த எழுத்து மூலப் போட்டிப் பரீட்சை மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வு.

பதவிகள் மற்றும் கல்வித் தகைமைகள்

1. முகாமையாளர் – மனித வளங்கள் மற்றும் நிர்வாகம் (MM 1-1) 01 வெற்றிடம்

தகைமை: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மனித வள முகாமைத்துவம், வியாபார முகாமைத்துவம், வர்த்தகம், பொது நிர்வாகம் அல்லது அது தொடர்பான வேறு ஏதேனும் பட்டம்.

2. முகாமையாளர் – நிதி (MM 1-1) 01 வெற்றிடம்

தகைமை: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிதி, கணக்கியல், வியாபார நிர்வாகம், வர்த்தகம் அல்லது அது தொடர்பான வேறு ஏதேனும் பட்டம்.

அல்லது பதவிக்குரிய பாடப்பிரிவுடன் தொடர்புடைய அங்கீகரிக்கப்பட்ட பட்டய தொழில்சார் நிறுவனத்தின் இடைநிலைப் பரீட்சையில் சித்தியடைந்திருத்தல் மற்றும் பதவிக்குரிய துறையில் குறைந்தபட்சம் 1 வருட தகுதிக்குப் பின்னரான அனுபவம்.

3. முகாமையாளர் – செயற்பாடுகள் (MM 1-1) 01 வெற்றிடம்

தகைமை: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வியாபார நிர்வாகம், தொடர் வழங்கல் முகாமைத்துவம், வர்த்தகம், பொது நிர்வாகம், செயற்பாட்டு முகாமைத்துவம் அல்லது அது தொடர்பான வேறு ஏதேனும் பட்டம்.

4. உள்ளகக் கணக்காய்வாளர் (MM 1-1) 01 வெற்றிடம்

தகைமை: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிதி, கணக்கியல், வியாபார நிர்வாகம், வர்த்தகம் அல்லது அது தொடர்பான வேறு ஏதேனும் பட்டம் மற்றும் பதவிக்குரிய துறையில் குறைந்தபட்சம் 1 வருட தகுதிக்குப் பிந்திய அனுபவம்.

அல்லது பதவிக்குரிய பாடப்பிரிவுடன் தொடர்புடைய அங்கீகரிக்கப்பட்ட பட்டய தொழில்சார் நிறுவனத்தின் இடைநிலைப் பரீட்சையில் சித்தியடைந்திருத்தல் மற்றும் பதவிக்குரிய துறையில் குறைந்தபட்சம் 1 வருட தகுதிக்குப் பிந்திய அனுபவம்.

5. சட்ட அதிகாரி (MM 1-1) 01 வெற்றிடம்

தகைமை: சட்டத்தரணி, மற்றும் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்திருத்தல்; அத்துடன் கீர்த்தி வாய்ந்த வர்த்தக நிறுவனமொன்றில் குறைந்தபட்சம் 3 வருட தகுதிக்குப் பின்னரான அனுபவத்தைப் பெற்றிருத்தல்.

2. கனிஷ்ட முகாமைத்துவ தரம் – JM 1-1

சம்பள அளவு:
ரூபா 72,650 – 10 x 1,360 – 18 x 2,040 – 122,970

வாழ்வுச்செலவுப் படி: ரூபா 17,800.00

தொழில்சார் கொடுப்பனவு: ரூபா 17,800.00

தொலைபேசிக் கொடுப்பனவு: 02/2022 PED சுற்றறிக்கையின் பிரகாரம்

வயதெல்லை: 22 முதல் 45 வயது வரை.

தெரிவு செய்யும் முறை: மொழித் திறன் / ஆற்றல் குறித்த எழுத்து மூலப் போட்டிப் பரீட்சை மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வு.

1. நிலைய முகாமையாளர் (JM 1-1) 18 வெற்றிடங்கள்

தகைமை: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மனிதவள முகாமைத்துவம், பொது நிர்வாகம், வியாபார நிர்வாகம், வர்த்தகம், முகாமைத்துவம் அல்லது அது தொடர்பான வேறு ஏதேனும் பட்டம்.

2. உதவி முகாமையாளர் (JM 1-1) 01 வெற்றிடம்

தகைமை: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வியாபார நிர்வாகம், தொடர் வழங்கல் முகாமைத்துவம், வர்த்தகம், பொது நிர்வாகம், செயற்பாட்டு முகாமைத்துவம் அல்லது அது தொடர்பான வேறு ஏதேனும் பட்டம்.

3. முகாமைத்துவ உதவியாளர் – தொழில்நுட்பவியல் / தொழில்நுட்பம்

தொழில்நுட்ப அதிகாரி (MA 2-3) 01 வெற்றிடம்
சம்பள அளவு: ரூபா 52,700 – 10 x 800 – 11 x 1,190 – 10 x 1,320 – 10 x 1,350 – 100,490

வாழ்வுச்செலவுப் படி: ரூபா 17,800.00

வயதெல்லை: 18 முதல் 45 வயது வரை.

கல்வித் தகைமைகள்: தொழில்நுட்பத் துறையில் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் (TVEC) ஏற்றுக்கொள்ளப்படும் தொழில்நுட்பம் / வாழ்க்கைத் தொழிற்பயிற்சி நிறுவனத்தினால் வழங்கப்படும் தேசிய வாழ்வொழில் திறன் (NVQ) 5ஆம் நிலைக்குக் குறையாத தேர்ச்சிச் சான்றிதழைப் பெற்றிருத்தல்.

அனுபவம்: தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 1 வருட கால தகுதிக்குப் பின்னரான அனுபவம்.

தெரிவு செய்யும் முறை: மொழித் திறன் / ஆற்றல் குறித்த எழுத்து மூலப் போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வு.

4. முகாமைத்துவ உதவியாளர் – தொழில்நுட்பம் அல்லாதது (ஒப்பந்த அடிப்படை)

முகாமைத்துவ உதவியாளர் 22 வெற்றிடங்கள்
சம்பளம்: ரூபா 43,312.00 + வாழ்வுச்செலவுப் படி ரூபா 17,800.00

வயதெல்லை: 18 முதல் 45 வயது வரை.

கல்வித் தகைமைகள்:

  1. க.பொ.த. (சா/த) பரீட்சையில் சிங்களம் / தமிழ், ஆங்கிலம், கணிதம் உட்பட நான்கு பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.
  2. க.பொ.த. (உ/த) பரீட்சையில் மூன்று பாடங்களில் (பொதுப் பரீட்சை தவிர்ந்த) சித்தியடைந்திருத்தல்.
  3. TVEC ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கணினி சொல் செயலாக்கம் (Word Processing) / தட்டச்சு அல்லது அதற்கு இணையான திறன்கள் தொடர்பான குறைந்தபட்சம் 6 மாத கால கற்கை நெறி.

அனுபவம்: தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 1 வருடகால தகுதிக்குப் பின்னரான அனுபவம்.

தெரிவு செய்யும் முறை: எழுத்து மூலப் போட்டிப் பரீட்சை மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வு.

5. ஆரம்பநிலை திறன் / திறனற்ற (ஒப்பந்த அடிப்படை)

அ. சாரதி 03 வெற்றிடங்கள்
சம்பளம்: ரூபா 38,448.00 + வாழ்வுச்செலவுப் படி ரூபா 17,800.00

வயதெல்லை: 18 முதல் 45 வயது வரை.

கல்வித் தகைமைகள் மற்றும் அனுபவம்:

  • க.பொ.த. (சா/த) பரீட்சையில் இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் குறைந்தபட்சம் இரண்டு (02) பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.
  • மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட கனரக வாகனம் செலுத்தும் சாரதி உரிமத்தைப் பெற்றிருத்தல்.
  • சாரதி உரிமத்தைப் பெற்றுக்கொண்டதன் பின் குறைந்தபட்சம் 3 வருடகாலம் வாகனம் செலுத்திய அனுபவம்.

தெரிவு செய்யும் முறை: எழுத்துப் போட்டிப் பரீட்சை மற்றும் செய்முறைப் பரீட்சை.

ஆ. அலுவலக உதவியாளர் (KKS) 02 வெற்றிடங்கள்
கொடுப்பனவு: ரூபா 40,834.00 (வாழ்வுச்செலவுப் படி ரூபா 17,800.00 உட்பட)

வயதெல்லை: 18 முதல் 45 வயது வரை.

கல்வித் தகைமைகள்: க.பொ.த. (சா/த) பரீட்சையில் இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் குறைந்தபட்சம் இரண்டு (02) பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.

விண்ணப்பிக்கும் நடைமுறை மற்றும் பொதுவான நிபந்தனைகள்

  1. சமர்ப்பிக்க வேண்டியவை: கல்வி, தொழில்முறைத் தகுதிகள் மற்றும் அனுபவம் ஆகியவற்றுக்கான அனைத்துச் சான்றிதழ்களின் பிரதிகள் மற்றும் உறவினரல்லாத இரண்டு நடுவர்களின் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி இலக்கங்களுடன் கூடிய முழுமையான சுயவிபரக் குறிப்பு (CV).
  2. அனுப்பும் முறை: பதிவுத் தபாலில் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். கடித உறையின் இடது மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியைக் குறிப்பிட வேண்டும்.
  3. அரசு ஊழியர்கள்: அரசாங்கத் திணைக்களங்கள் / நியதிச்சட்ட சபைகள் / அரச கூட்டுத்தாபனங்கள் / முழுமையான அரசாங்கக் கூட்டுத்தாபனங்களில் பணிபுரியும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட நிறுவனத் தலைவர்கள் ஊடாக அனுப்ப வேண்டும்.
  4. இறுதித் திகதி: விண்ணப்பங்கள் 2026 ஒக்ரோபர் 16ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு சென்றடைய வேண்டும். முழுமையற்ற மற்றும் பிந்திப் பெறப்படும் விண்ணப்பங்கள் முன்னறிவிப்பின்றி நிராகரிக்கப்படும்.
விண்ணப்ப முடிவுத் திகதி: 16.10.2026

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

தலைவர்,
வரையறுக்கப்பட்ட தேசிய விவசாய சந்தை சேவைகள் நிறுவனம்,
விசேட பொருளாதார நிலைய கட்டிடத்தொகுதி,
இல. 44, கிரிமண்டல மாவத்தை,
நாரஹேன்பிட்டி,
கொழும்பு – 05.

📞 தொலைபேசி:
011 2506 939 (தலைவர்)

✉️ மின்னஞ்சல்:
namslpb@gmail.com

1 Trackback / Pingback

  1. National Agri market services limited vacancies 2026 october - Ceylon Vacancy

Comments are closed.