Scholarships for Migrant Workers Children 2026 – Sri Lanka Bureau of Foreign Employment (SLBFE)
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு சென்ற / சென்று நாடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில்களைப் பகிர்ந்தளித்தல் – 2026
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து கொண்டு தொழில்வாய்ப்புக் கருதி வெளிநாடு சென்ற / சென்று நாடு திரும்பிய பெற்றோர்களின் பிள்ளைகளுக்காக 2026 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் வழங்குவதற்காகப் பின்வரும் தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள மாணவர்களின் விண்ணப்பங்கள் நிகழ்நிலையில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. (www.slbfe.lk என்ற பணியக இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க முடியும்.)
- குறிப்பிட்ட விண்ணப்பதாரியின் தாய்/தந்தை 2020.08.10 ஆம் திகதியிலிருந்து 2025.08.10 ஆம் திகதி வரையில் இவ் இடைப்பட்ட காலப்பகுதியில் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டில் தொழில் புரிந்திருத்தல் வேண்டும்.
- 2025 ஆம் ஆண்டிற்கான 05 ஆம் ஆண்டு புலமைப் பரீட்சையில் மாவட்ட வெட்டுப் புள்ளியில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
தரவேற்றப்பட வேண்டிய (upload) ஆவணங்கள்
- விண்ணப்பதாரியின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் மூலப்பிரதி.
- கல்வி அமைச்சக்கத்தினால் வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்று அட்டையின் மூலப்பிரதி.
- புலம்பெயர் தாய்/தந்தையின் கடவுச்சீட்டின் புகைப்படமுள்ள பக்கத்தின் பிரதி.
- குறிப்பிட்ட விண்ணப்பதாரியின் தாய்/தந்தை 2020.03.17 ஆம் திகதியிலிருந்து 2025.03.17 ஆம் திகதி வரையில் இவ் இடைப்பட்ட காலப்பகுதியில் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டில் தொழில் புரிந்திருத்தல் வேண்டும்.
- 2024 (2025) ஆம் ஆண்டிற்கான க.பொ.த (சா/தர) பரீட்சையில் குறைந்தபட்சம் கணிதம் உள்ளிட்ட 06 பாடங்களில் சித்திபெற்று அதில் 03 பாடங்களில் திறமைச் சித்தியுடன் க.பொ.த (உ/தர) கற்பவராக இருத்தல் வேண்டும்.
தரவேற்றப்பட வேண்டிய (upload) ஆவணங்கள்
- விண்ணப்பதாரியின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் மூலப்பிரதி.
- கல்வி அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட க.பொ.த (சா/தர) பரீட்சை பெறுபேற்று சான்றிதழின் மூலப்பிரதி.
- விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டை.
- புலம்பெயர் தாய்/தந்தையின் கடவுச்சீட்டின் புகைப்படமுள்ள பக்கத்தின் மூலப் பிரதி.
- குறிப்பிட்ட விண்ணப்பதாரியின் தாய்/தந்தை 2019.11.25 ஆம் திகதியிலிருந்து 2024.11.25 ஆம் திகதி வரையில் இவ் இடைப்பட்ட காலப்பகுதியில் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டில் தொழில் புரிந்திருத்தல் வேண்டும்.
- 2024 ஆம் ஆண்டு க.பொ.த (உயர்தர) பரீட்சையில் சித்தியடைந்து தற்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அரச அல்லது தனியார் பல்கலைக்கழகமொன்றில் முழுநேர பட்டப்படிப்பு அல்லது க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து தேசிய தொழில்நுட்ப கல்லூரி அல்லது பிற கல்வி நிறுவனங்களில் இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேலதிகமான டிப்ளோமா பாடநெறிகளை கற்பவராக இருத்தல் வேண்டும்.
தரவேற்றப்பட வேண்டிய (upload) ஆவணங்கள்
- விண்ணப்பதாரியின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின் மூலப்பிரதி.
- கல்வி அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட க.பொ.த- (உ/தர) பரீட்சை பெறுபேற்று சான்றிதழின் மூலப்பிரதி.
- விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டை.
- குறிப்பிட்ட கல்வி நிறுவன பதிவாளரினால் மாணவர் தகுதியை உறுதிப்படுத்திய கடிதத்தின் மூலப்பிரதி.
- புலம்பெயர் தாய்/தந்தையின் கடவுச்சீட்டின் புகைப்படமுள்ள பக்கத்தின் மூலப் பிரதி.
- மேற்குறிப்பிட்ட ஆவணங்களை முகாமையாளர் (நலன்புரி) பிரிவுக்கு சமர்ப்பிப்பது கட்டாயமாவதூடன் அவ்வாறு சமர்ப்பிக்கப்படாத விண்ணப்பங்கள் தகைமைகள் பூர்த்தி செய்யப்படாததாகக் கருதி நிராகரிக்கப்படும்.
- விண்ணப்பப்படிவம் ஏற்றுக் கொள்ளும் இறுதித் திகதி : 2026.11.20
- ஒரு பிரிவுக்கு ஒரு முறை மாத்திரமே உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

Ministry of Industry and Foreign Employment Registration with Sri Lanka Foreign Employment Bureau Distribution of Scholarships to Children of Foreign Employment Workers 2026 Registered with Sri Lanka Foreign Employment Bureau