Aswesuma New Eligible List Released: How to Appeal if “Not Eligible”
அஸ்வெசும நலன்புரி நன்மைகளுக்காக விண்ணப்பித்த தகுதியான நபர்கள் தமது மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலவகாசம் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், முன்னதாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நவம்பர் 11 ஆம் திகதியுடன் பிரதேச செயலகங்கள் ஊடாகப் பெறப்படும் நேரடி விண்ணப்பங்கள் நிறைவுக்கு வருவதாகவும், பொதுமக்களின் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு நவம்பர் 15 ஆம் திகதி வரை இணையவழி (Online) முறைமையின் ஊடாக மாத்திரமே மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பொறுப்பேற்கப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.
💰 மாதாந்தக் கொடுப்பனவு விபரங்கள்
🔴 “NOT ELIGIBLE” எனக் காட்டப்படுகிறதா? இதற்கான முக்கிய காரணங்கள்:
- குடும்பத்தின் மாதாந்த வருமானம், சொத்து விபரம் மற்றும் பொருளாதார நிலை தொடர்பான உத்தியோகபூர்வ கணக்கீட்டு மதிப்பீடு.
- குடும்ப உறுப்பினர்கள் தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களில் உள்ள மாற்றங்கள் அல்லது தரவுப் பிழைகள்.
- மதிப்பீட்டுத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட தகுதிப் புள்ளிகள் வரம்பை (Cut-off Score) எட்ட முடியாமை.
- தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு குறிப்பிட்ட வறுமைப் பிரிவுகளுக்குள் குடும்பம் வகைப்படுத்தப்படாமை.
குறிப்பு: இணையத்தளத்தில் உங்கள் “Status” ஐ மாத்திரம் பார்த்து ஏமாற்றமடைய வேண்டாம். நீங்கள் உண்மையில் வறிய குடும்பம் எனின் உடனடியாக மேன்முறையீடு செய்ய சட்டத்தில் இடமுண்டு.
பிரதேச செயலக / கிராம அலுவலர் பட்டியலைச் சரிபாருங்கள்
உங்கள் கிராம அலுவலர் அலுவலகம் அல்லது பிரதேச செயலகத்தில் பகிரங்கமாக ஒட்டப்பட்டுள்ள பெயர் பட்டியலில் உங்கள் குடும்பத்தின் நிலையை நேரடியாக உறுதிப்படுத்துங்கள்.
தகவல்களை மீளாய்வு செய்யுங்கள்
முன்னர் நீங்கள் வழங்கிய குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, தொழில், மாதாந்த வருமானம் மற்றும் விசேட தேவையுடையோர் விபரங்களில் ஏதேனும் விடுபட்டுள்ளதா என்பதைச் சரிபாருங்கள்.
இணையவழியில் (Online) தவறாமல் மேன்முறையீடு செய்யுங்கள்
நேரடி சமர்ப்பிப்பு முடிந்துவிட்டதால், நீட்டிக்கப்பட்டுள்ள நவம்பர் 15 ஆம் திகதிக்குள் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக Online இல் விண்ணப்பித்துத் தீர்வு பெறுங்கள்.
- இணைய வழி (Online): தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள அவகாசத்தின் கீழ் https://www.eservices.wbb.gov.lk என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
- தகவல் தொடர்பு மையங்கள் (Communication Centers): வீட்டில் கணினி அல்லது இணைய வசதி இல்லாதவர்கள் உங்கள் பிரதேசத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற கொம்யூனிகேஷன் மையங்கள் மூலம் இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.
- உத்தியோகபூர்வ படிவங்கள்: தகவல்களை முன்கூட்டியே தயாராக வைத்துக்கொள்ள படிவங்களை நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ தளமான www.wbb.gov.lk மூலம் அல்லது கீழ் உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
- தொழில்நுட்ப உதவி: சுயமாகச் செய்ய முடியாதவர்கள் பிரதேச செயலக நலன்புரிப் பிரிவு உத்தியோகத்தர்களின் உதவியை நாடலாம் அல்லது 1924 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு தொடர்புகொள்ளலாம்.
⚠️ நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விசேட விதிமுறைகள்:
- படிவங்கள் விபரம்: மேன்முறையீடு செய்வதற்குப் பிரதான விண்ணப்பப் படிவத்துடன் A மற்றும் B படிவங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும். தகுதியற்ற ஒருவருக்கு எதிராக ஆட்சேபனை (Objection) செய்ய C படிவம் கட்டாயமாகும்.
- ஒரு மேன்முறையீடு மட்டுமே: ஒரு மேன்முறையீட்டாளரினால் ஒரு தடவை மாத்திரமே மேன்முறையீடு சமர்ப்பிக்க முடியும்.
- பெயர் குறிப்பிடாத ஆட்சேபனை: பொது மக்கள் தகுதியற்ற பணக்கார நபர்களுக்கு எதிராக ஆட்சேபனை செய்யும்போது தமது பெயரை வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை (ரகசியம் பேணப்படும்).
- தபால் / ஈமெயில் ஏற்கப்படாது: நலன்புரி நன்மைகள் சபையின் பிரதான அலுவலகத்திற்கு தபால் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
- தொலைபேசி இலக்கம் (Mobile Number): பதிவு செய்யும் போது சரியான, பயன்பாட்டில் உள்ள கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை வழங்குவது கட்டாயமாகும்.
📅 நீட்டிக்கப்பட்ட புதிய உத்தியோகபூர்வ கால எல்லை!
இணையவழி (Online) முறைமையின் ஊடாக மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பொறுப்பேற்கும் இறுதி நாள்:
2026 நவம்பர் மாதம் 15 ஆம் திகதியுடன் முற்றாக முடிவடையும்!
🏠 இரண்டாவது தகுதியுடையோர் பெயர்ப்பட்டியல் எப்போது?
அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழ் மேலும் 7,40,127 குடும்பங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றன. இரண்டாவது தகுதியுடையோரின் பெயர் பட்டியல் நவம்பர் / டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படுமென நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
… உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள name list என்பதை கீழே உள்ள அட்டவணையில் கிளிக் செய்து உங்கள் கிராம சேவகர் பிரிவு கொடுப்பதன் மூலம் பார்வையிட முடியும்.
| NAME LIST 2025(2026) | CLICK HERE |
| PDF FORM(REAPPEAL) | DOWNLOAD |
| ONLINE FORM | APPLY HERE |