G.C.E A Level 2020 Results Release Date??

க. பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகும் திகதி தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ் அவர்களினால் உயர் தர பெறுபேறுகள் தொடர்பாக கேட்கப்பட்ட போது சித்திரை புது வருடப் பிறப்புக்குமுன்னர் வெளியாகும் என குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இறுதியாக வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி சித்திரை மாதத்தின் இறுதி வாரத்தில் உயர் தர பெறுபேறுகள் வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் செப்டம்பர் மாதம் அளவில் பல்கலைக்கழக உள் வாங்கல்களை மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளை ஜூன் மாதமளவில் வெளியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

Results வெளியாகும் திகதி தொடர்பாக கல்வி அமைச்சர் கூறிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு மற்றும் கல்வி அரச அறிவித்தல்கள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.JOIN HERE

குறித்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.